உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இயைப்பு

இளங்குமரனார் தமிழ்வளம் - 35 ஓ

யானையின் முழக்கத்தால் இடியும் இடித்து நடுங்கும் என்றது யானையின் வலிமை கூறியது. மீட்டு மேலே செல்லவிடாமல் திருப்பி. எறிதல்-வீழ்த்துதல். கருவியின்றிக் களிற்றை எதிர்த்து வீழ்த்துதலைக் கையெறிந்தானும் என்றும் கருவி கொண்டு எதிர்த்து வீழ்த்துதலைக் கடுக்கொண்டெதிர்ந்தானும் விலக்குதல் என்றார் நச்சினார்க்கினியர். கடுக் கொண்டு என்பதால் 'கடுமுள்கருவி' கொண்டு விலக்குதல் குறிப்பாகலாம்.

'மள்ளர் பகடு மீட்டு, ஆர்த்தார்; வானோரும் ஆர்த்தார்' என இயைக்க.

வாளோர் ஆடும் அமலை

அமரனைத் தூக்கி வாள்வீசி ஆடல்

33) ஆளுங் குரிசில் உவகைக் களவென்னாம் கேளின்றிக் கொன்றாரே கேளாகி - வாள்வீசி

ஆடினார் ஆர்த்தார் அடிதோய்ந்த மண்வரங்கிச்

சூடினார் வீழ்ந்தானைச் சூழ்ந்து

-பு.தி. 1348.

(32)

மேற்கோள்: 'களிற்றொடு பட்ட வேந்தனை அட்டவேந்தன் வாளோர் ஆடும் அமலை' என்பதற்கு மேற்கோள். (தொல்.புறத்.17.நக்.) 'களிற்றொடுபட்ட வேந்தனைக் கொன்ற வேந்தன் படையாளர் வியந்து பட்டோனைச்

சூழ்ந்து நின்று ஆகும் திரட்சி' என்று பொருள் விரிப்பார் அவர்.

பொருள் : வீழ்ந்து பட்ட வீரனுக்கு உறவினர் எவரும் இலராய், அவனைக் கொன்றவரே அவனுக்கு உறவினராய்ச் சூழ்ந்து மகிழ்விலே வாளெடுத்து வீசி ஆடினர்; ஆர்த்தனர்; அவன் காலடிபட்ட இடத்தின் மண்ணை எடுத்து அணிந்தனர். ஆதலால் என்றும் வெற்றி பெறும் வேந்தன் மகிழ்வுக்கு அளவில்லை.

விளக்கம்

போர்க்களத்தில் இரக்கம் காட்டாமல் வீறுகாட்டிப் போரிடுதலும், அக்களத்தில் வீழ்ந்து பட்ட வீரனை மதித்துப் போற்றிக் கொண்டாடித் தம் உறவென்று