உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயைப்பு :

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்

163

கொண்டு செய்யும் சிறப்பெல்லாம் செய்தலும் வீரர் இயல்பாகலின், 'கேளின்றிக் கொன்றாரே கேளாகி' என்றார். 'பேராண்மை என்ப தறுகண் ஒன்றுற்றக் கால், ஊராண்மை மற்றதன் எஃகு' என்னும் குறள் எண்ணத்தக்கது. காலடி மண்ணை எடுத்துத் தெய்வப் பொருளெனப் பூசிக் கொள்ளலாம். இது மண்வழிபாடாம். வீரர் பிறந்த மண்ணை மதித்துப் போற்றுதல் பண்டு தொட்ட வழக்காகும். 'உவகைக் களவென்னா' 'கேளன்றி' என்பவை நச். பாடம்.

வீழ்ந்தாளைச் சூழ்ந்து கொன்றாரே கேளாகி, ஆடினார், ஆர்த்தார், ஓடினார், குரிசில் உவகைக் களவென்னாம்' என இயைக்க.

வாகைத்திணை

ஏற்றல்

(தருகொடை பெறுதல்)

34) நிலம்பொறை யாற்றா நிதிபல கொண்டும் குலம்பெறுதீங் கந்தணர் கொள்ளார் - நலங்கிளர் தீவாய் அவிசொரியத் தீவிளங்கு மாறுபோல் தாவா தொளிசிறந்த தாம். - பு.தி. 1160.

மேற்கோள்: இஃது ஏற்றல் (தொல்.புறத்.20.) நச்.

பொருள்

விளக்கம்

(33)

நிலமும் சுமக்க முடியாத செல்வங்கள் பல கொள்வதெனினும் தம்குடிக்குத் தீமை வருவதாம் செயலினை அந்தணர் செய்யார். அவர் தகைமை நலமோங்கி விளங்கும் தீயிடத்து நெய் சொரிதலால் தீமேலும் விளங்குவதுபோல் குறையாப் புகழ்ச் செய்கைகளே சிறந்து விளங்கும் வண்ணம் அமைவதாம்.

நிலம் பொறை யாற்றா நிதி என்றது நிதியின் அளவுப் பெருக்கம் உரைப்பது. மலைபோன்றவற்றையும் தாங்க வல்ல நிலம் தாங்க மாட்டாத செல்வம் என்றது அதன் மிகுதியை உயர்வு நவிற்சி வகையால் கூறியதாகும். காசுக்காகக் கயமை புரியும் குடியினர்