உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இயைப்பு

இளங்குமரனார் தமிழ்வளம் -35 ஓ

அல்லர் அந்தணர் என்றும் அவர் மலையெனப் பொன்னைக் குவிப்பினும் தம்குடிப் பெருமை குன்றும் செயல் புரியார் என்றும் தெளிவாக்கினார். அவர் செய்யும் வேள்வித்தீ நெய் சொரியச் சொரிய உயர்ந்து விளங்குமாறு போல் அவரும் உளியுடன் விளங்குவார் என்றது குடிப்புகழொடு கூடிய

உவமையாம்.

அவி சொரியச் சொரியத் தீ விளங்குமேயன்றி அணையாது. அதுபோல் எத்தகைய பெருநிதியம் எய்தினும் அந்நிதியத்திற்காகத் தம் குடியியல் மாறி விடார் என விளக்கம் காண்க.

'அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்'

என்னும் குறள் அந்தணர் தன்மைக்கு அளவு கோலாதல் அறிக.

‘தீங்கு அந்தணர் கொள்ளார்; தீவிளங்குமாறுபோல் ஒளிசிறந்தது' என இயைக்க.

வாணிகரீகை

(வாணிகர் கொடைச் சிறப்பு)

35) ஈட்டிய எல்லாம் இதன்பொருட் டென்பது காட்டிய கைவண்மை காட்டினார் - வேட்டொறும் காமருதார்ச் சென்னி கடல்சூழ் புகார்வணிகர் தாமரையும் சங்கும் போல் தந்து பு.தி. 1161.

மேற்கோள்: இது வாணிகர் ஈகை

-

(34)

(தொல்.புறத்.20)நச்.

பொருள் : விரும்பத்தக்க மாலை அணிந்த சோழனது கடல்

சூழ்ந்த காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகர், வேண்டுவார் வேண்டும் போதெல்லாம் தாமரை என்றும் சங்கம் என்றும் சொல்லப்படும் பெருஞ் செல்வத்தைத் தந்து, தாம் தேடிய செல்வம் அனைத்தும் இவ்வாறு தருதற்கே என்பதைக்