உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்கம்

இயைப்பு

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்

165

காட்டுவார்போல் தகவான கொடை நலத்தைக் காட்டினார்.

தாமரை சங்கு என்பன சிறப்பாகப் போற்றப்பட்ட நிதியங்கள். இவற்றைச், 'சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து, தரணியோடு வானாளத் தருவரேனும்; மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லேம்' என்பது தேவாரம். பதுமம்-தாமரை. சங்கின் வடிவத்திலும், தாமரையின் வடிவத்திலும் அமைந்தவை என்பதைப் பெயரான் அறியலாம். இவற்றை இந்திரன் நிதியம் எனவும் அளகையோன் (குபேரன்) நிதியம் எனவும் கூறுவர்.ஐ.அம். பல் என்னும் ஈற்று எண் எனல் தொல்காப்பியம்.

புகார் வணிகர் சிறப்பியல் இதனால் விளங்கு வதுடன் புகார் வணிகச் சிறப்பும் சோழவேந்தன் செழிப்பும் அறநிலையும் புலப்படுப்பது இப்பாடல். சென்னி-சோழன். அவன் சீர்த்தி வாழ்த்தில் காண்க.

(41)

சமுதாயத்தில் இருந்து ஈட்டப்படும் செல்வம், அச்சமுதாயத்திற்குப் பயன்படுமாறு கொடுத்தலே முறைமை என்பதைத் தெளிவிப்பார் போல், ஈட்டிய வெல்லாம் இதன் பொருட்டென்பது காட்டிய கைவண்மை காட்டினார்' என்றார். வேட்டொறும் -விரும்பும் தோறும். காமர் விருப்பம், அழகு.

-

விண்ணகக் கொடையும் மண்ணகத்துக் கிட்டும் என்பதால் வணிகர் குடிச் சிறப்புரைத்தது இது. வணிகர் தந்து இதன் பொருட்டென்பது காட்டினார் என இயைக்க. (35)

பாசறை முல்லை

(பாசறை வேந்தன் பேராண்மைக் காவல்)

36) மூதில்வாய்த் தங்கிய முல்லைசால் கற்புடை

மாதர்பாற் பெற்ற வலியுளவோ - கூதிரின்