உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெங்கண் விறல்வேந்தன் பாசறையுள் வேனிலான் ஐங்கணை தோற்ற அழிவு. - பு.தி. 1271

மேற்கோள்: 'கூதிர்வேனில் என்றிரு பாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபு' என்பதற்கு மேற்கோள் (தொல்.புறத்.21.நச்.) 'இருத்தற்பொருள் முல்லை என்பதே பற்றிப் பாசறைக் கண் இருத்தலால்

பாசறை முல்லை எனப் பெயர் கூறுவாரும் உளர்' என்றும் கூறினார் அவர்.

பொருள் : குளிர்வாட்டும் கூதிர் காலப் பொழுதிலும், பகைவர் மாட்டுச் சிவந்த கண்ணையுடைய வலிய வேந்தன், பாசறையின் கண் இருக்குங்கால், மன்மதவேளின் மலர்க்கணைகள் ஐந்தும் செயலற்று அழிந்தன; தம் பழமையான குடிவரவுடைய இல்லத்தின்கண் உள்ள திண்ணிய கற்பமைந்த, மாதரிடத்துப் பெற்றுக் கொண்டு வந்த வலிமையும் உளதே போலும்! இல்லாக்கால் இத்திண்மை அமையாது என்பதாம்.

விளக்கம்

-

மூதில் வழிவழியாக அமைந்த மறக்குடி; கற்பின் அடையாளப் பூ முல்லை. 'இல்லிருத்தல் முல்லை' என்பது முல்லைத் திணையின் இலக்கணம். ஆதலின் முல்லைசால் கற்பு என்றார்.

'கற்பெனும் திண்மை' என்பது திருக்குறள். மனத்துக் கண் நிறுத்துக் காக்கும் நிறையே கற்பாமாகலின் அதனை 'வலி' என்றார். போர் வலிமையுடைய வேந்தனுக்கு இக்கற்பின் வலிமையமைந்தமை தம் மாதரிடத்துக் கொண்ட அன்பு தரப்பெற்ற தாகலின் 'பெற்ற வலி' என்றார்.

வெங்கண் கொடுமைக் குறியாம் சிவந்தகண். தன் மகவைக் கண்ட அதியமான் போர்க்களத்தி லிருந்து நேரே வந்தவன் ஆகலின் அவன் கண்ணின் சினம் இன்னும் ஆறிற்றில்லை என்றார் ஒளவை யார். அத்தகு கண் 'வெங்கண்' என்க. வேனிலான்-