உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயைப்பு

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்)

167

மன்மதன். ஐங்கணை-ஐந்து மலரம்புகள். அவை: தாமரை, மா, அசோகு, முல்லை, நீலம் என்பன.

அக்கணைகள் செயலற்றுப் போனமையின் 'தோற்ற அழிவு' என்றார்.

பாசறையுள் வேந்தன், வேனிலான் கணை தோற்ற அழிவு, மாதர்பாற் பெற்ற வலி' என இயைக்க. (36) பின்தேர்க்குரவை

(வெற்றி கொண்ட தேரின்பின் நிகழும் குரவைக் கூத்து) 37) வென்று களங்கொண்ட வேந்தன்தேர் சென்றதற்பின் கொன்ற பிணநிணக்கூழ் கொற்றவை - நின்றளிப்ப உண்டாடு பேய்க்கண் டுவந்தனவே போர்ப்பரிசில்

கொண்டா டினகுரவைக் கூத்து. - பு.தி. 1429.

மேற்கோள்: ஒன்றிய மரபிற் பின்றேர்க் குரவை என்பதற்கு எடுத்துக்காட்டு இது. (தொல்.புறத்.21.நக்.) இதன் பொருளைத், 'தேரோரை வென்ற கோமாற்கே பொருந்திய இலக்கணத்தானே தேரின் பின்னே கூழுண்ட கொற்றவை கூளிச் சுற்றம் ஆடும் குரவை' என்று கூறுவார் அவர்.

பொருள்

விளக்கம்

பகைவென்று போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்ட வேந்தனது தேர்க்களத்தை விட்டுச் சென்றதற்குப் பின்னர், ஆங்குக் கொல்லப்பட்ட பிணமாகிய ஊன் கூழைக் கொற்றவை முன்னின்று அளித்தலால் அதனை ஏற்றுண்ட பேய்கள் உவந்து ஆடின; போர்க்களம் தந்த பரிசிலாகிய அதற்கு மகிழ்ந்து குரவைக் கூத்து ஆடின.

பகற் போர் முடித்து வேந்தன் செல்லுதலால், 'வேந்தன் சென்றபின்' என்றார்; பேயாட்சி இரவுப் போழ்தாகலின் என்க. நிணம்-ஊனும், குருதியும் பிறவும் கூழ் அடுதலும், கொடுத்தலும் பரணி நூல்களில் விரிவாகக் கூறப்படுவன. ஆங்குக் கண்டு கொள்க. நின்றளிப்ப என்றது நெடும் பொழுது வேண்டுமளவு தருதலைக் குறித்து நின்றது.