உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

இயைப்பு

35ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

'எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்ம ரேனும் கைகோத்தாடும் கூத்து.... குரவைக் கூத்து (சிலப். 3:24). வாயால் ஒலி எழுப்புதல் 'குலவை' என இந்நாள் வழங்கப்படுதல் அறியத்தக்கது. குரவைகள் பல ஆதல் ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை என்பவற்றால் விளங்கும் (சிலப்.)

'சென்றதற்பின் கொற்றவை கூழ் அளிப்ப, பேய்கண் டுவந்தன, கூத்து கொண்டாடின என இயைக்க. (37) சான்றோர் பக்கம்

(சான்றோர் சால்பியல் சாற்றல்)

38) யானை நிரையுடைய தேரோ ரினும்சிறந்தார் ஏனை நிரையுடைய ஏர்வாழ்நர் - யானைப்

படையோர்க்கும் வென்றி பயக்கும் பகட்டோர் உடையோர்க் கரசரோ ஒப்பு.

-பு.தி.1159.

மேற்கோள்: 'பகட் டினானும் மாவினானும் துகட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கமும்' (தொல்.புறத். 21.) நச்.

பொருள்

விளக்கம்

யானைக் கூட்டத்தையுடைய அரசரினும் சிறந்தவர் ஆநிரைகளைத் தம்மதாகக் கொண்ட வேளாண் குடியினர். யானைப் படையுடைய வேந்தர்க்கும் வெற்றிதரும், காளை பூட்டப்பட்டு இழுக்கும் ஏரையுடைய உழவர்க்கு அவ்வேந்தர் ஒப்பாகார்.

இருவரும் நிரையுடைய (கூட்டமுடைய) ராயினும், ஆநிரையுடைய உழவர்க்கு யானை நிரையுடையவர் ஒப்பாகார் என்றார். ஒப்பாகாமை விளக்குவாராய், யானைப் படைக்கும் ஏர் உடையவர் விளைக்கும் உணவின்றிக் கூடாமையால் ஏர் உடையார்க்கு அரசரோ ஒப்பு என்றார். தேரோர்', யானைப் படையோர்' 'அரசர்' என்பன அரசர் குடியுரைத்தன. 'ஏர்வாழ்நர்' 'பகட்டேர் உடையோர்' என்பன உழவர் குடியுரைத்தன. பகடு-காளை.

'உழுவார் உலகத்தார்க்கு ஆணி'; அஃதாற்றா(து) எழுவாரை எல்லாம் பொறுத்து'