உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயைப்பு

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்)

‘உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கு நிலை’

என்னும் குறள்கள் கருதத்தக்கன.

'ஏர் எழுபது' என்பதும் 'திருக்கை வழக்கம்'

என்பதும் இதனை விரித்துரைக்கும் நூல்கள்.

169

'தேரோரினும் ஏர்வாழ்நர் சிறந்தார்; அரசரோ ஒப்பு என இயைக்க.

காமம் நீத்தபால்

(பாலியல் வேட்கையை ஒடுக்கிய திறம்)

39) இளையர் முதியர் எனவிருபால் பற்றி

விளையும் அறிவென்ன வேண்டா - இளையனாய்த்

தன்தாதை காமம் நுகர்தற்குத் தன்காமம் ஒன்றாது நீத்தான் உளன். - பு.தி. 542

(38)

மேற்கோள்: காமம் நீத்த பாலுக்கு (தொல்.புறத். 21.)நச். பொருள் : அறிவுச்சிறப்பு இளமையிலே உண்டாகும் என்றோ முதுமையிலே உண்டாகும் என்றோ இரு வகையாகப் பகுத்துக் கூறவேண்டுவதில்லை. இளம்பருவத் தனாக இருக்கும்போதே, தன் முதிய தந்தை திருமணம் கொண்டு இன்புறுதற்காகத் தான் மணத்தலையும் துறந்து விட்டவனும் ஒருவன் உளன் என்பது உலகறிந்த செய்தி. ஆதலால் இளமையிலும் அறிவு சிறப்பாக வெளிப்படுதலும் கூடும் என்றும், அது முதுமைக்கே சிறப்பாக உரியது என்று கொள்ளற்க என்றும் கூறினார்.

விளக்கம்

இளையனாக இருக்கும்போதே தன் தந்தை இன்பம் நுகர்தற்காகத் தான் மணத்தலைத் துறந்தவன் வீடுமன். இது பாரதப் பெரு நூலால் அறியவரும் செய்தி. உலகறிந்த செய்தி என உட்கொண்ட மையால் சிறப்புப் பெயரைச் சுட்டாமலே 'இளையனாய் நீத்தான் உளன்' என்றார். தாதை தந்தை. அவன் சந்தனு என்பான் இளையனாய்

-