உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

இயைப்பு

35ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

இன்பம் நீத்தான். புரூரவா என்பவனுமாம் என்பர் (பெருந்தொகை).

அறிவு என்பது அறிந்து கொள்வதை மட்டும் குறிப்பதன்று.பண்ணுடைமை, சான்றாண்மை, ஒப்புரவறிதல்,அருளுடைமை முதலாயவற்றையும்

குறிக்கும்.

'சென்ற விடத்தால் செலவிடாது தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு’

‘அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய்

தன்னோய்போல் போற்றாக் கடை

என வரும் குறள்களைக் கருதுக.

'நீத்தான் உளன்;

என இயைக்க.

ளையர் முதியர் என வேண்டா

(39)

கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல்

(கொடுப்பவரைப் புகழ்ந்து கொடாதவரை இகழ்வது)

40) மின்னும் தமனியமும் வெற்றிரும்பும் ஓரினமாப் பொன்னின் பெயர்படைத்தாற் போலாதே - கொன்னே ஒளிப்பாரு மக்களாய் ஒல்லுவ தாங்கே

அளிப்பாரு மக்களா மாறு

- புறத்திரட்டு 228.

(தொல். புறத். 35 நச்.)

மேற்கோள்: 'கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலுக்கு

பொருள் : ஒளிவிடும் தங்கமும் கருநிற இரும்பும் 'பொன்' என்னும் பொதுப் பெயரால் வழங்கப்படும். அது போல் பொருந்தாதது வாய்ப்பிருந்தும் ஒன்றைக் கொடுக்கத் தக்கார்க்கும் கொடுக்காமல் ஒளிப் பவரையும், தம்மால் இயன்றதையெல்லாம் உடனே அளிப்பவரையும் மக்கள் என்னும் பொதுப் பெயரால் வழங்குவது.

விளக்கம்

வெண்பொன், செம்பொன், பைம்பொன், கரும்பொன் அல்லது ரும்பொன் என்பவை வெள்ளி, செம்பு, தங்கம், இரும்பு ஆகியவற்றைக்