உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயைப்பு

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்)

171

குறிக்கும். இவற்றுள் 'பொன்' என்பது பொதுப் பெயர். போலாதே-போன்றது ஆகாதே. கொன்னே - வீணே. ஒல்லுவது-இயன்றது.

‘உறுப்பொத்தல் மக்களொப் பன்றால்’ "மக்களே போல்வர் கயவர்'

என்னும் குறள்களைக் கருதலாம்.

வெற்றிரும்பு என்பதில் 'வெறுமை' பயனின்மை கருதிய தன்று. ஒளியின்மை குறித்தது. தங்கமும் இரும்பும் பொலிவில் வேறுபடினும் மாறுபடுதல் இல்லை. ஒளிப்பாரும், அளிப்பாரும் எவற்றானும் ஒப்பானவர் அல்லர்; மறுதலையானவர். ஆதலால் 'போலாதே' என்றார்.

'பெயர் படைத்தாற் போலதே; மக்களாமாறு. 'என இயைக்க.

புற நிலைவாழ்த்து

தலைவனைத் தெய்வம் காக்க வாழ்த்துதல்) 41) கண்ணுதலோன் காக்கக் கடிநேமி யோன்காக்க எண்ணிருதோள் ஏந்திழையாள் தான்காக்கப்-பண்ணியநூற் சென்னியர்க் களிக்கும் செல்வனீ மன்னுக நாளுமிம் மண்மிசை யானே. - 4.6. 1500.

-

(40)

மேற்கோள்: 'புறநிலை வாழ்த்து' என்பதற்கு எடுத்துக்காட்டு இது. (தொல்.புறத்.35.நச்.) பாட்டுடைத் தலைவன் முன்னிலையாகத் தெய்வம் படர்க்கையாக வாழ்த்தும் வாழ்த்து என்பது அவர் கூறும் பொருள்.

பொருள் : நெற்றிக் கண்ணையுடைய இறைவன் காப்பானாக; காவல்கடன் பூண்ட ஆழிப்படையோனாம் திருமால் காப்பானாக; பதினாறு கைகளையடைய கொற்றவை காப்பாளாக; தேடிய புகழைத் தன்குடியாம் சோழர் குடிக்கு அளிக்கும் செல்வனே நீ நாளும் நாளும் இம்மண்ணுலகில் புகழால் நிலைபெறுவாயாக.