உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

விளக்கம்

இளங்குமரனார் தமிழ்வளம் - 35 ஓ

கண்ணுதல், நுதற்கண் என மாற்றியமைக்க. நுதல் - நெற்றி. கடி-காவல்; நேமி-சக்கரம். ஏந்திழை - உயர்ந்த அணிகலம் அணிந்தவள்; இவண் வீரமடந்தையாம் கொற்றவை. நூல்-நூலான் வரும் பாடுபுகழ். சென்னியர்-சோழர். ஒருவன் பெருமை, குடிப்பெருமையாதலால், 'சென்னியர்க்களிக்கும் செல்வன்' என்றார். மண்மிசை-உலகில். செல்வனீ என்பது 'தெய்வநீ' என நச்சினார்க்கினியரால் பாடம் கொள்ளப்படும்.

இயைப்பு

'காக்க, காக்க, காக்க, நீ மன்னுக' என இயைக்க, காக்க என்பது 'காப்ப' எனப் பாடமாகக் காட்டும் பெருந்தொகை. (41)