உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

நூழில்

64. அறத்திற் பிறழ அரசெறியுந் தானை

மறத்திற் புறங்கண்டு மாறான் - குறைத்தடுக்கிச் செல்லுங்கால் காட்டுத்தீச் சென்றாங்குத் தோன்றுமே

பல்படையார் பட்ட படி.

புறத். 17

வாகைத் திணை

ஓதல்

65. முறையோதின் அன்றி முளரியேன் அல்லேன் மறையோதி னானிதுவே வாய்மை - அறிமினோ ஈன்றாள் பயிற்றிருந்தே எம்மறையும் ஓதினான் சான்றான் மகனொருவன் தான்.

ஓதுவித்தல்

66. ஒத்த முயற்சியான் ஒத்து வெளிப்படினும் நித்திய மாக நிரம்பிற்றே - எத்திசையும் தாவாத அந்தணர் தாம்பயிற்றிக் காவிரிநாட டோவாத ஒத்தின் ஒலி.

புறத். 20.

வேட்டல்

67. ஒருமழுவோள் வேந்தன் ஒருமூ வெழுகால் அரசடு வென்றி யளவோ - உரைசான்ற ஈட்டமாம் பல்பெருந்தூண் எங்கும் பசுப்படுத்து வேட்டநாள் பெற்ற மிகை.

ஈதல்

68. போர்வகை வாய்த்த புரவலரின் மேதக்கார்

ஏர்வாழ்நர் என்பதற் கேதுவாம் - சீர்சால் உரைகாக்கு மன்னர்க் கொளிபெருகத் தாந்தம் நிரைகாத்துத் தந்த நிதி.

இது வேளாளர் நிரை காத்தது.

– புறத். 21.