உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல் 58. தலைவன் மதில்சூழ்ந்த தார்வேந்தர்க் கொன்று வலைவன் வலைசுருக்கி யாங்கு - நிலையிருந்த தண்டத் தலைவர் தலைக்கூட வீற்றிருந்தான் உண்டற்ற சோற்றார் ஒழிந்து.

இஃது அகத்தோன் தொகைநிலை.

உடன்வீழ்தல்

59. அறத்துறைபோல் ஆரெயில் வேட்ட அரசர் மறத்துறையு மின்னாது மன்னா - நிறைச்சுடர்கள் ஒன்றி வரப்பகல்வாய் ஒத்த ஒளிதேய்ந்தாங் கின்றிவர் வீழ்ந்தார் எதிர்ந்து.

தும்பைத்திணை

இருநிலந்தீண்டாவகை

60. பருதிவேன் மன்னர் பலர்காணப் பற்றார்

குருதிவாள் கூறிரண்டு செய்ய - ஒருதுணி

கண்ணிமையா முன்னங் கடிமதிலுள் வீழ்ந்ததே

மண்ணதே மண்ணதே என்று.

புறத். 13

புறத். 16

185

-இஃது உழிஞைப் புறத்துத் தும்பையாம் இருநிலம் தீண்டாவகை.

தானை நிலை

61. சென்ற உயிர்போலத் தோன்றா உடல்சிதைந்தோன்

நின்ற அடிபெயரா நின்றவை - மன்றல்

அரமகளிர் மங்கலத்திற் காங்காங்கு வைத்த மரவடியே போன்றன வந்து.

குதிரை நிலை

62. பல்லுருவக் காலின் பரியுருவத் தாக்கித்தன் தொல்லை உருவிழந்த தோற்றம்போல் - எல்லாம் ஒருகணத்துத் தாக்கி உருவிழந்த பாய்மாப் பொருகளத்து வீழ்ந்து புரண்டு.

எருமை

63. சீற்றங் கனற்றச் சீறக்கணித்துச் செல்லுங்கால்

ஏற்றெருமை போன்றான் இகல்வெய்யோன் - மாற்றான் படைவரவு காத்துத்தன் பல்படையைப் பின்காத் திடைவருங்காற் பின்வருவார் யார்?