உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

மண்ணுமங்கலம்

53. மழுவாளான் மன்னர் மருங்கறுத்த மால்போற் பொழிலேழுங் கைக்கொண்ட போழ்தில் - எழில்முடி குடாச்சீர்க் கொற்றவனுஞ் குடினான் கோடியர்க்கே கூடார்நா டெல்லாங் கொடுத்து.

- இது புறத்தோன் மண்ணுமங்கலம்.

54. வென்றி பெறவந்த வேந்தை இகன்மதில்வாய்க் கொன்று குடுமி கொளக்கண்டு - தன்பால் விருந்தினர் வந்தார்க்கு விண்விருந்து செய்தான் பெருந்தகையென் றார்த்தார் பிறர்.

- இஃது அகத்தோன் மண்ணுமங்கலம்.

வாள்மங்கலம்

55. செற்றவர் செங்குருதி யாடற்கு வாள்சேர்ந்த கொற்றவை மற்றிவையுங் கொள்ளுங்கொல் - முற்றியோன் பூவொடு சாந்தும் புகையவி நெய்ந்நறைத் தேவொடு செய்தான் சிறப்பு.

-இஃது புறத்தோன் வாண்மங்கலம்.

56. வருபெரு வேந்தற்கு வான்கொடுத்து மற்றை யொருபெரு வேந்தற்கூர் ஈந்தாள் - ஒருவன்வாள் இவ்வுலகிற் பெற்ற இகற்கலையேற் றூர்தியாள் அவ்வுலகிற் போய்ப்பெறுங்கொல் ஆங்கு

இஃது அகத்தோன் வாண்மங்கலம்.

தொகைநிலை

57. கதிர்சுருக்கி அப்புறம்போங் காய்கதிர்போல் வேந்தை எதிர்சுருக்கி ஏந்தெயில்பா ழாக்கிப் - பதியிற்

பெயர்வான் தொகுத்த படைத்துகளாற் பின்னும் உயர்வான் குறித்த துலகு.

-இது புறத்தோன் தொகைநிலை.