உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல் ஓ

பாசி

48. பொலஞ்செய் கருவிப் பொறையுமிப் பண்ணாய் நிலந்திடர் பட்டதின் றாயிற் - கலங்கமர்மேல்

வேத்தமர் செய்யும் விரகென்னாம் வேன்மறவர் நீத்துநீர்ப் பாய்புலிபோல் நின்று.

-இஃது அகத்தோர் புறத்தோர் இருவர்க்கும் ஒக்கும். பாசிமறம்

49. மறுநாட்டுந் தங்கணவர் மைந்தறியு மாதர்

பிறநாட்டுப் பெண்டிர்க்கு நொந்தார் - எறிதொறும்போய் நீர்ச்செறி பாசிபோல் நீங்காது தங்கோமான் ஊர்க்செரு வுற்றாரைக் கண்டு.

-இது புறத்தோன் பாசிமறம்.

50. தாந்தங் கடைதொறும் சாய்ப்பவும் மேல்விழுந்த வேந்தன் படைப்பிணத்து வீழ்தலான் - ஆங்கு மதுக்கமழும் தார்மன்னர்க் குள்ளூர் மறுகிற் பதுக்கையும் வேண்டாதாம் பற்று.

இஃது அகத்தோன் பாசிமறம்.

அகமிசைக்கிவர்தல்

51. வாயிற் கிடங்கொடுக்கி மாற்றினார் தம்பிணத்தாற் கோயிற் கிடங்கொடுக்கிக் கோண்மறவர் - ஞாயிற் கொடுமுடிமேற் குப்புற்றார் கோவேந்தர்க் காக நெடுமுடிதாங் கோடல் நினைந்து.

- இஃது புறத்தோன் அகமிசைக் கிவர்தல்.

52. புற்றுறை பாம்பின் விடநோக்கம் போல்நோக்கிக் கொற்றுறை வாய்த்த கொலைவேலோர் - கொற்றவன் ஆரெயின்மேற் றோன்றினார் அந்தரத்துக் கூடாத போரெயின்மேல் வாழவுணர்போன்று.

- இஃது அகத்தோன் அகமிசைக் கிவர்தல்.

183