உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

உழிஞைத் திணை

ஏணிமயக்கம்

43 சேணுயர் ஞாயிற் றிணிதோளான் ஏற்றவும் ஏணி தவிரப்பாய்ந் தேறவும் - பாணியாப் புள்ளிற் பரந்து புகல்வேட்டார் போர்த்தொழிலோர் கொள்ளற் கரிய குறும்பு.

- இது புறத்தோர் ஏணிமயக்கம்.

44. இடையெழுவிற் போர்விலங்கும் யானையோர் போலு மடையமை யேணி மயக்கிற் - படையமைந்த ஞாயில் பிணம்பிறக்கித் தூர்த்தார் நகரோற்கு வாயில் எவனாங் கொல் மற்று.

இஃது அகத்தோர் ஏணிமயக்கம்.

முற்றிய முதிர்வு

45. கடல்பரந்து மேருச்சூழ் காலம்போற் சென்றார் கொடிமதில் காத்தோரைக் கொல்லக் - கடலெதிர் தோன்றாப் புலிபோல் அரண்மறவர் தொக்கடைந்தார் மான்றேரான் மூதூர் வரைப்பு.

இஃது புறத்தான் முற்றிய முதிர்வு.

46. ஊர்சூழ் புரிசை யுடன்சூழ் படைமாயக்

கார்சூழ்குன் றன்ன கடைகடந்து - போர்மறவர் மேகமே போலையில் சூழ்ந்தார் விலங்கல்போன் றாகஞ்சேர் தோள் கொட்டி யார்த்து.

இஃது அகத்தோன் முற்றிய முதிர்வு.

நொச்சி

47. இருகன்றின் ஒன்றிழந்த ஈற்றாப்போற் சீறி

ஒருதன் பதிகற் றொழியப் - புரிசையின்

வேற்றரணங் காத்தான் விறல்வெய்யோன் வெஞ்சினத்துக் கூற்றரணம் புக்கதுபோற் கொன்று.

- இஃது அகத்துழிஞையோன் எயில்காத்த நொச்சி.