உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல் பெயர் முதலியன பொறித்தது

38. கைவினை மாக்கள் கலுழக்கண் நோக்கிழந்து செய்வினை வாய்ப்பவே செய்தமைத்தார் - மொய்போர் மறவர் பிணம்பிறக்கி வாள்வாய்த்து வீழ்ந்தோன் பிறபெயர்சூழ் கன்மேற் பெரிது.

சிறப்புப் படைத்தது

39. அன்றுகொள் ஆபெயர்த் தாரமரில் வீழ்ந்தோன்கற் கின்று கொள் பல்லான் இனமெல்லாம் - குன்றாமற் செய்ம்மினோ சீர்ப்பச் சிறப்பாகத் தீபங்கள் வைம்மினோ கோட்டம் வகுத்து.

கல்வாழ்த்து

40. ஆவாழ் குழக்கன்னுய் வித்துக் களத்தவிந்த நீவாழ வாழிய நின்னடுகல் - ஓவாத விற்கோட்ட நீண்டதோள் வேந்தன் புலிபொறித்த பொற்கோட் டிமயமே போன்று.

புறத். 5

வஞ்சித் திணை

வயங்கல் எய்திய பெருமை

41. மேற்செல்லுங் காலைத் துணைவந்த வேந்தர்தம் பாற்செல்லச் செல்லும் பரிசினால் - நாற்கடல்சூழ மண்மகிழும் காட்சியான் மீன்பூத்த வானத்து வெண்மதிபோன் கேம்பட்டான் வேந்து.

நெடுமொழி

42. போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக்

கார்க்கடல் பெற்ற கரையன்றோ - போர்க்கெல்லாம் தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சேர்

ஏனாதிப் பட்டத் திவன்.

-

-இது பிறர் கூறிய நெடுமொழி.

181

புறத்.8