உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

32. கல்லாயும் எற்றெரிந்து காண்டற் கெளிவந்த வல்லாண் படலைக்கு வம்மினோ - வெல்புகழாற்

சீரியல் பாடல் சிதையாமல் யாம்பாடத் தூரிய மெல்லாம் தொட.

-இது கடவுளாகிய பின் கண்டது.

கால்கோள்

33. வரையறை சூழ்கிடக்கை மாத்தாட் பெருங்கல் வரையறை செய்யிய வம்மோ - வரையறை வாராப் பெரும்புகழ் வல்வேல் விடலைக்கும் ஓராற்றாற் செய்வ துடைத்து.

நட்டுக் கால் கொண்டது.

34. காப்புநூல் யாத்துக் கடிகமழ் நீராட்டிப் பூப்பலி பெய்து புகைகொளீஇ - மீப்படர்ந்த காளை நடுகற் சிறப்பயர்ந்து கால்கொண்மின் நாளை வரக்கடவ நாள்.

நீர்ப்படை

35. வாளமர் வீழ்ந்த மறவோன்கல் ஈர்த்தொகுக்கிக் கேளிர் அடையக் கிளர்ந்தெழுந்து - நீர்விசும்பிற் கார்ப்படுத்த வல்வேறு போலக் கழலோன்கல் நீர்ப்படுத்தார் கண்ணீரி னின்று.

நடுகல்

36. சீர்த்த துகளிற்றாய்த் தெய்வச் சிறப்பெய்த நீர்ப்படுத் தற்கு நிலைகுறித்துப் - போர்க்களத்து மன்னட்ட வென்றி மறவோன் பெயர் பொறித்துக் கன்னட்டாற் கல்சூழ் கடத்து.

இது கல் நாட்டியது.

37. கோள்வாய்த்த சீயம்போற் கொற்றவர்தம் மாவெறிந்து வாள்வாய்த்து வீழ்ந்த மறவேலாய் - நாள்வாய்த் திடைகொளலின்றி எழுத்துடைக் கல்வாய் மடைகொளல் வேண்டும் மகிழ்ந்து.

இது மறவனை நாட்டியது.