உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்) 26. இந்திரன் என்னின் இரண்டேகண் ஏறூர்ந்த சுந்தரத்தான் என்னிற் பிறையில்லை - அந்தரத்துக் கோழியான் என்னின் முகன்ஒன்றே; கோதையை ஆழியான் என்றுணரற் பாற்று.

-இது சேரனைப் பலதேவராகக் கூறிற்று.

நெடுமொழி

27. தானால் விலங்கால் தனித்தால் பிறன்வரைத்தால் யானை எறிதல் இளிவரவில் - யானை ஒருகை யுடைய தெறிவலோ யானும் இருகை சுமந்துவாழ் வேன்.

வருதார் தாங்கல்

28. ஏற்றெதிர்ந்தார் தார்தாங்கி வெல்லவருகென் றேவினான் கூற்றினுந்தாயே கொடியளே - போர்க்களிறு காணா இளமையாற் கண்டிவனோ நின்றிலனேன் மாணாருள் யார்ப்பிழைப்பார் மற்று.

வாள்வாய்த்துக் கவிழ்தல்

29. ஆடும் பொழுதின் அறுகயிற்றுப் பாவைபோல் வீடும் சிறுவன்தாய் மெய்ம்மகிழ்ந்தாள் - வீடுவோன் வாள்வாயின் வீழ்ந்த மறவர்தந் தாயரே

கேளா அழுதார் கிடந்து.

வை (28, 29) தன்னுறு தொழில்.

பிள்ளையாட்டு

30. வன்கண் மறமன்னன் வாண்மலைந்து மேம்பட்ட

புன்றலை ஒள்வாட் புதல்வன்கண் - டன்புற்றுக்

கான்கெழு நாடு கொடுத்தார் கருதார்க்கு

வான்கெழு நாடு வர.

179

இதனைப் பிள்ளைத் தன்மையினின்று பெயர்த்தலிற் பிள்ளைப் பெயர்ச்சியும் என்ப.

காட்சி

31. தாழி கவிப்பத் தவஞ்செய்வர் மண்ணாக

வாழிய நோற்றனை மால்வரை - ஆழிசூழ் மண்டில மாற்றா மறப்புகழோன் சீர்பொறிப்பக் கண்டனென் நின்மாட்டோர் கல்.

-இது கல் ஆராய்கின்றார் காட்சி.