உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

இளங்குமரனார் தமிழ்வளம் -35

ஆர்மலைந்தாடியது

20. ஆர்வேய்ந்த கோலத்தோ டாடுவர் பாடுவர் போர்வேந்தர் பெற்றநாள் போன்றுவப்பர் - சீர்சால் பறைகெழு வாரணப்போர் பண்டிகழ்ந்தோ ரின்று சிறை கெழு வாரணப்போர் செய்து.

வை (18-20) தன்னுறு தொழில்.

வாடாவள்ளி

21. மண்டம ரட்ட மறவர் குழாத்திடைக் கண்ட முருகனுங் கண்களித்தான் - பண்டே குறமகள் வள்ளிதன் கோலங்கொண் டாடப் பிறமகள் நோற்றாள் பெரிது.

கழல்நிலை

22. மீளாது பெற்ற விறற்கழலோன் வாளாட்டின் வாளாடு கூத்திவந்தாடினாள் - வாளாட்டின் மண்ணாளு மன்னரே பெண்ணாவார் வண்மைக்குப் பெண்ணாடின் யாதாம் பிற.

உன்னநிலை

23. முன்னங் குழையவும் கோடெலாம் மொய்தளிரீன் றுன்னங் குழையொலிதத் தோங்குவாய் - மன்னரைக் கொன்று களங்கொள்ளுங் கொல்யானை வேந்தனை வென்றுகளங் கொள்ளுமேல் வேந்து.

-தன்னுறு தொழில்

பூவை நிலை

24. குருந்த மொசித்தஞான் றுண்டா லதனைக் கரந்த படியெமக்குக் காட்டாய் - மரம்பெறாப் போரிற் குருகுறங்கும் பூம்புனனீர் நாட மார்பிற் கிடந்த மறு.

இது சோழனை மாயோனாகக் கூறிற்று.

25. ஏற்றூர்தி யானும் இகல்வெம்போர் வானவனும் ஆற்றலும் ஆள்வினையும் ஒத்தொன்றின் ஒவ்வாரே கூற்றக் கணிச்சியோன் கண்மூன் றிரண்டேயாம் ஆற்றல்சால் வானவன் கண்.

இது சேரனை அரனாகக் கூறிற்று.