உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்

உயிர்ப்பலி

15. நச்சிலைவேற் காளைக்கு நாளையே கொற்றவை கைச்சிலையும் நல்கும்யாம் காணேம்கொல் - மிச்சில்கூர் வாளின்வாய்த் தீண்டாத வார்குருதி மெய்சாய்ப்பத் தாளின் வாய் வீழ்ந்தான் தலை.

குருதிப்பலி

16. ஆடினி பாடி யளவின்றிக் கொற்றவை

பாடினி பாடற் படுத்துவந்தாள் -நாடிய

தோளுழலை யாடுவோன் தோளினும் தூக்கமைந்த

தாறுழலை யாடுவோன் தான்.

புறத். 4

177

பொதுவகையான் இருவகை வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொது.

பொதுவியல்திணை

வேலன் வெறியாட்டு

17. அமரகத்துத் தன்னை மறந்தாடி யாங்குத்

தமரகத்துத் தன்மறந் தாடும் - குமரன்முன்

கார்க்காடு நாறும் களனிழைத்துக் காரிகையார்

ஏர்க்காடும் காளை இவன்.

இது சிறப்பறியா மகளிர் ஆடுதலிற் புறனாயிற்று.வேலனாடுதல் அகத்திணைக்குச் சிறந்தது.

போந்தை மலைந்தாடியது

18. ஏழக மேற்கொண் டிளையோன் இகல்வென்றான் வேழ மிவனேற வேந்துளவோ - ஏழுலகுந் தாந்தயங்கு நாகம் தலைதயங்க ஆடாமோ போந்தையங் கண்ணி புனைந்து.

வேம்பு மலைந்தாடியது

19. குறும்பூழ்ப்போர் கையெறிந்து கொற்றம் பெறுதல் இறும்பூதென் றியாமாடல் வேண்டா - செறுங்கோன் குலமதிக்கு மாற்றியிற் கொற்றவன் வேம்பு தலைமலையற் பாலதூஉ மன்று.