உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

9.

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

கழுவொடு பாகர் கலங்காமல் யாத்துத் தொழுவிடை யாயந் தொகுமின் - எழுவொழித்தாற் போமே இவையிவற்றைப் போற்றுமின் புல்லொடுநீர் தாமேய் புலம்போலத் தந்து.

வை கண்டோர் கூற்று.

கொடை

10. கொடைத் தொழி லெல்லாம் குறைவின்றிப் பண்டே முடித்தனன் என்றிருந்த மூத்தோன் - கொடைக்கு வரம்பிலன் என்றே மருண்டான் நிரைகோட் கரந்தையங் கண்ணியாற் கண்டு.

கண்டோர் கூற்று.

11. கடிமனைச் சீறூர்க் கடுங்கட் கறவை வடிநவில் வேலோன் மறுத்தோம்ப லொட்டான் அடிபுனை தோலின் அரண்சேர்ந்து மள்ளர் வருகமன் வாயிற் கடை.

இது படைத்தலைவர் படையாளரைக் கூயினது.

வேய் கூறினார்க்குச் சிறப்புச் செய்தல்

12. மாற்றருந் துப்பின் வயவேந்த னல்லனே ஏற்ற பெருஞ்சிறப் பின்றீதும் - வேற்றூரிற் புல்வேய் குரம்பைப் புறஞ்சிறைவாய் நின்றொற்றி நல்வேய் உரைத்தார்க்கு நாம்.

துடிநிலை

புறத்.3

13. நித்திலம்செய் பட்டமு நெற்றித் திலதமும்

ஒத்திலங்க மெய்பூசி ஓர்ந்துடீசித் - தத்தம் துடியரோ டூர்ப்புறஞ் சூழந்தார் மறவர் குடிநிரை பாராட்டக் கொண்டு.

கொற்றவை நிலை

14. அருமைத் தலைத்தரும் ஆநிரையுள் ஐயை எருமைப் பலிகோள் இயைந்தாள் - அரசனும் வேந்தன்மேற் செல்வான் விறல்வஞ்சி சூடானென்று யாந்தன்மேற் சீறாமல் இன்று.