உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்) மனக்குரிய காதல் வயவேந்த னென்றும் நினக்குரிய வாக நிரை

இவை கண்டோர் கூற்று.

புறத்திறை

4. கரந்தியல் காட்டுத்தீப் போலப் பெரிதும் பரந்துசென் மள்ளர் பதிந்தார் - அரந்தை விரிந்தவியு மாறுபோல் விண்டோயத் தோன்றி எரிந்தவியும் போலுமிவ் வூர்

இது கண்டோர் கூற்று.

புறத். 3

- புறத். 3

ஊர் கொலை

5. அரவூர் மதியிற் கரிதூர வீம

விரவூ ரெரிகொளீஇக் கொன்று - நிரைநின்ற பல்லான் தொழுவும் பகற்காண்மார் போர்கண்டோர் கொல்வார்ப் பெறாஅர் கொதித்து.

6. சென்ற நிரைப்புறத்துச் சீறூர்த் தொடைகொண்டு நின்ற மறவர் நிலஞ்சேர்ந்தார் - கொன்றாண்டு இகலிழந்த வல்வில் இளையோர்புண் தீரத் துகளெழுங்கொல் பல்லான் தொழு.

வை கண்டோர் கூற்று.

பூசன் மாற்று

7. ஒத்த வயவர் ஒருங்கவிய நாண்படரத் தத்தம் ஒலியும் தவிர்ந்தன - வைத்தகன்றார் தம்பூசன் மாற்றி நிரைகொள்வான் தாக்கினார் வெம்பூசன் மாற்றிய வில்.

புறத். 3

-

கண்டோர் கூற்று.

தந்துநிறை

8. குளிறுகுரல்முரசங் கொட்டின் வெரூஉம் களிறொடுதேர் காண்டலு மாற்றா - நளிமணி நல்லா னின்நிரை நம்மூர்ப் புறங்கானம் எல்லாம் பெறுக இடம்.

175