உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

இளங்குமரனார் தமிழ்வளம்

-

35

காணாதார் நின்னை யலையாமை கட்டுரைப்பர் நாணாத கண்ணெனக்கு நல்கு.

கந்தழி வாழ்த்து

75. சார்பினால் தோன்றாது தானருவாய் எப்பொருட்கும் சார்பெனநின் றெஞ்ஞான்றும் இன்பந் தகைத்தரோ வாய்மொழியான் மெய்யான் மனத்தான் அறிவிறந்த தூய்மையதா மைதீர் சுடர்.

வள்ளி வாழ்த்து

76. பிறைகாணும் காலைத்தன் பேருருவ மெல்லாம் குறை காணா தியாங்கண்டு கொண்டு - மறைகாணா தேய்ந்து வளர்ந்து பிறந்திறந்து செல்லுமென் றாய்ந்தது நன்மாயை யாம்.

வள்ளிப்பாற்பட்ட பெண்பாற்கடவுள் வாழ்த்து

77. தனிக்கணிற் பாகமும் தானொறா மானம் பனிக்கண்ணி சாவு படுத்துப் - பனிக்கணந் தாமுறையா நிற்குமத் தண்மதிக்குத் தாயிலளென்று யாமுறையா நிற்கும் இடத்து.

கடைநிலை

78. வேற்றுச் சுரத்தொடு வேந்தர்கண் வெம்மையு மாற்றற்கு வந்தேனெம் வாயிலோய்-வேற்றார் திறைமயக்கு முற்றத்துச் சேணோங்கு கோயில் இறைமகற்கெம் மாற்றம் இசை.

வேள்விநிலை

. புறத். 33

79. பொன்னிறைந்த பொற்கோட்டுப் பொற்குளம்பிற் கற்றாதந் தின்மகிழான் அந்தணரை யின்புறுப்பச் - சென்னிதன் மாநிலமே வானுலகம் போன்றது வான்துகள்போர்த் தானுலக மண்ணுலகா மன்று.

விளக்குநிலை

80. மைமிசை யின்றி மணிவிளக்குப் போலோங்கிச் செம்மையி னின்றிலங்குந் தீபிகை - தெம்முனையுள் வேலியுங் கோடாது வேந்தன் மனைவிளங்கக் கோலினும் கோடா கொழுந்து.

- புறத். 35