உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

பரிபாடலில் திருமுருகன்

-

-

51

மனைவி! தோளசைவு கண்ணசைவு - துணியசைவு -அணியசைவு மாலையசைவு அம்மகளசைவு அவள் இடையசைவு ஆகிய எல்லா அசைவுகளும், காண்போரை அசைக்காமல் விடுமோ!

முகிலின் இடையே எழுந்த மின்னற் கொடியென டையிடை வெளிப்பட அமைந்த - பொன்னாற் செய்த தலைக்கோல் மாலைகள் கூந்தலோடு அசைகின்றன; தேனும் கள்ளும் உண்டமையால் உண்டாகிய களிப்பு நிறைகின்றது; அசைவு எழில் கூட்டுதற்கென உடுத்த மேற்றுகிலாடை அசைந் தெழில் கூட்டுகின்றது; கண்களில் சிவப்பு ஊர்கின்றது: ஆடும் பூங்கொடி யென ஆடுகிறாள் ஆடல் மகள்.

அவள் தகுதிக்கு ஒத்த தகவாளனாம் கணவன் துடிப்பறையை இயக்குகிறான். அத்தாளத்திற்குப் பொருந்துமாறு அவள்தன் மார்பில் அணிந்த முத்துமாலை அசையவும், காற்றால் அசைக்கப் பட்ட மெல்லிய ஆடைதானும் அசையவும், அணிகலங்கள் அசையவும் பூங்கொடி ஆடுவது போல் ஆடுகிறாள்! துடியின் தாளத்திற்குத் தகத் தோளை அசைக்கிறாள். அத்தோள் நோக்கிக் கண்கள் புரள்கின்றன; அக்கண்களின் புரளுதல் அம்புகள் புரளுதல் போல் விளங்குகின்றன (21:254-65)

66

இக் காட்சிகளைப் புலவரின் அழகு நடையில் காண்க: 'கண்ணொளிர் திகழடல் இடுசுடர் படர்கொடி மின்னுப்போல்

ஒண்ணகை

தகைவகை நெறிபெற இடையிடை

யிழைத்துயர்த்த

செண்ணகைக் கோதை கதுப்போ டியல்

மணிமருள் தேன்மகிழ் தட்ப ஒல்கிப்

பிணி நெகிழப் பைந்துகில் நோக்கம் சிவப்பூரப் பூங்கொடி போல நுடங்குவாள் ஆங்குத்தன் சீர்த்தகு கேள்வன் உருட்டுந் துடிச்சீரால் கோடணிந்த முத்தாரம் ஒல்க ஒசிபவளேர் ஆடை அசைய அணியசையத் தானசையும் வாடையுளர் கொம்பர் போன்ம்,

வாளி புரள்பவை போலும் குடிச்சீர்க்குத் தோளூழ் பெயர்ப்பவள் கண்.