உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

35

இளங்குமரனார் தமிழ்வளம் -35

எதிர் எதிராக எழும் ஒலியைக் குறித்தாலும் வாளா குறித்தாரோ பாவலர்! யாழிசைக்கு வண்டிசையையும், குழலி சைக்குத் தும்பிசையையும், முழவு முழக்கத்திற்கு அருவி முழக்கத் தையும், விறலியர் ஆடலுக்குப் பூங்கொடி ஆடலையும், பாடினி இசைக்கு மயிலகவுதலையும் உவமை யாக்கிய அருமை - ஒரு மாலை போலத் தொடுத்துக் கூறும் பேரருமை எண்ணுதோறும் இன்பம் ஊற்றெடுப்பதாம். நல்லழிசியார் கொண்டிருந்த கலைநயம் இக்காட்சிப் படமாக விளங்குதல் கண்கூடு. ஒலி நயத்தையே ஓவியக் காட்சியாக்க உணர்வுடையார்க்கு இயலும் அருமையே அருமை!

கூத்து :

முகில் முழக்கமிடுகின்றது; ஆலவட்டம் வீசுவது போலத் தோகை விரித்து ஆடுகின்றது மயில்: அம்மயிலும் ஒன்றா இரண்டா? கூட்டம் கூட்டமாக ஆடும் காட்சி!

ஆடும் மயிற் காட்சிக்குப் பின்னணி இசைகள் வேண்டு மல்லவோ! குழலிசை போலத் தும்பிகள் இசைக்கின்றன; வண்டினங்கள் யாழிசைக்கின்றன; அருவி நீர் மத்தளம் முழக்கு கின்றது! ஒரு மேடையில் தோன்றி ஒலிப்பவை போலப் பரங்குன்றில் திகழ்கின்றன (21;30-38),

இக்காட்சி நம்மை மட்டுமா கவர்கின்றது. எத்தனை எத்தனையோ புலமையாளர்களைக் கவர்ந்துள்ளது!

“குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட

மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய

மயிலா டரங்கின் மந்திகாண் பனகாண்

17

எனச் சாத்தனாரிடம்விளையாடுகின்றதே!

"தண்டலை மயில்களாடத் தாமரை விளக்கம் தாங்கக்

கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளைகண் விழித்து நோக்கத்

தெண்டிரைஎழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்

வண்டுகள் இனிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ'

17

எனக் கம்பரிடம் முழுதுறும் இசையரங்காகவே திகழ்கின்றதே! இப்படி எத்துணைப் பாவலர்களையெல்லாம் காந்தமெனக் கவர்ந்துள்ளது இக்காட்சி.

இசையும் கூத்தும் இவ்வளவோ? இன்னொரு காட்சியில் இசை கூத்துக் கலைகளின் உணர்வோட்டம் விஞ்சித் திகழ்கின்றது. துடி கொட்டுகிறான் கணவன்; இசைக்கு ஏற்ப ஆடுகிறாள்