உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

49

ஒரு பக்கத்தே, பாணர் இசைக்கும் யாழொலி எழுகின்றது. ஒரு பக்கத்தே, தேனுண்ணும் வண்டுகளின் இசை ஒலி எழுகின்றது.

ஒரு பக்கத்தே, குழலின் இசை எழுகின்றது.

ஒரு பக்கத்தே, இசைத்திறம் வல்ல தும்பிகளின் ஓசை எழுகின்றது.

ஒரு பக்கத்தே, முழவின் முழக்கம் எழுகின்றது.

ஒரு பக்கத்தே, மலையில் இருந்து அருவி முழக்கம் எழுகின்றது.

ஒரு பக்கத்தே, ஆடல் மகளிர் அசைந்து ஆடுகின்றனர். ஒரு பக்கத்தே, காற்று அசைத்தலால் பூங்கொடிகள் ஆடி அசைகிந்னறன.

ஒரு பக்கத்தே, ஆடலும் பாடலும் வல்ல பாணர் மகளிர் ஆடிக்கொண்டே பாடுகின்றனர்.

ஒரு பக்கத்தே, ஆடல்வல்ல மயில் இசைநயங் கனியக் கூவுகின்றன.

இவ்வாறு பக்கம் பக்கமாக ஆனால் எதிர் எதிராக விளங்கும் சிறப்புடையது குன்றம் (17:9-21).

இசையும் கூத்தும் இயல்பாக இயல்கின்ற அருமைக் காட்சி இது. இதன் நடையழகும் கொஞ்சி விளையாடுகின்றது; ஒருதிறம், பாணர் யாழின் தீங்குரல் எழ,

ஒருதிறம், யாணர் வண்டின் இமிரிசை எழ; ஒருதிறம், கண்ணார் குழலின் கரைபு எழ, ஒருதிறம், பண்ணார் தும்பி பரந்திசை யூத: ஒருதிறம்,மண்ணார் முழவின் இசை எழ,

ஒருதிறம், அண்ணல் நெடுவரை அருவிநீர் ததும்ப; ஒருதிறம், பாடல்நல் விறலியர் ஒல்குபு நுடங்க, ஒருதிறம், வாடை யுளர்வயின் பூங்கொடி நுடங்க, ஒருதிறம், பாடினி முரலும் பாலையங் குரலின் நீடுகிளர் கிழமை நிறைகுறை தோன்ற ஒருதிறம்,ஆடுசீர் மஞ்ஞை அரிகுரல் தோன்ற மாறுமா றுற்றனபோன் மாறெதிர் கோடல் மாறட்டான் குன்றம் உடைத்து.