உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:

10.செவ்வேள் பாடல்களில் கலை வளம்

தமிழ், முத்தமிழ் என்னும் பகுப்பும் சிறப்பும் உடையது. அதன் மூன்று கூறும் பரிபாடலில் உண்டு என்பதை வேலோட்டமாகக் காண்பாரும் அறிவர்.

முத்தமிழ் :

சை

இலக்கியச் செறிவு பரிபாடலில் காணக்கூடியது. இ வகுத்துப் பாடப்பெற்றது அப்பாட்டு. அதன்மைதி பல இடங்களில் கூத்தும் உரையாட்டுமாய் அமைவது. எவரும் எளிதில் அறிய வாய்ப்பது.

இம்மூவகைத் தமிழ்ச் சிறப்பொடு ஓவியக் கலைச் செய்திகள் பரிபாடலில் குறிக்கத் தக்க வகையில் அமைந்துள. பல்வகைப் புலமையிலும் போர்க்கலைத் திறமைகளிலும் மதுரையார் சிறந்து விளங்கியமையைப்,

"புலத்தினும் போரினும் போர்தோலாக் கூடல்"

என்று கூறும் பரிபாடலால் (19:8) அறிய வாய்த்தலால், அக்காலக் கலைக் களஞ்சியமாகப் பரிபாடல் அமைந்தது என்று சுருங்கக் கூறலாம்.

இயலும் இசையும் இசைந்து இயலுதலை ஒரே அடியில் "புரியிறு நரம்பும் இயலும் புணர்ந்து" என்கிறார் பரிபாடலார் (18:51) அதுபோல் இசையும் கூத்தும் இணைந்து இயலுதலைப் பாடுவார் பாணிச்சீரும் ஆடுவார் அரங்கத் தாளமும்" என்கிறார்

(8:109).

புலமை வெற்றி என்பதில் பல்வேறு புலமை திறங்களின் பரப்பை அறிவோம் எனினும், இயற்றமிழ்ப் புலமைக் கொடையே அவை என்பது விளங்கும், இனி இசைத்தமிழ் பற்றிய செய்தி களாகச் செவ்வேள் பாடல்களில் உள்ளவற்றைத் திரட்டினும் அவை மதிப்புக்குரியவே.

இசை :

பகை அழித்தவன் செவ்வேள். அதனால் அவன் மா அட்டான். அவன் குன்றில் மாறு மாறு ஒலிகள் கேட்கின்றனவோ என வியப்பும் விம்மிதமும் கிளர்ந்தெழப் பாடுகிறார் நல்லழிசியார்