உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

மேஎ வெஃகினவை

வென்றுயர்த்த கொடி விறல்சான்றவை

கற்பினை நெறியூ டற்பிணைக் கிழமை

நயத்தகு மரபின் வியத்தகு குமர

வாழ்த்தினேம் பரவுதுந் தாழ்த்துத்தலை நினையா

நயத்தலிற் சிறந்தவெம் மடியுறை

பயத்தலிற் சிறக்க நாடொறும் பொலிந்தே.

81

குன்றம் பூதனார் பாட்டு: மருத்துவன் நல்லச்சுதனார் சை: பண்ணுப் பாலை யாழ்.

பதினான்காம் பாடல்:

கார்மலி கதழ்பெய றலைஇ யேற்ற

நீர்மலி நிறைசுனை பூமலர்ந் தனவே தண்ணறுங் கடம்பின் கமழ்தாதூ தும்

வண்ணவண் டிமிர்குரல் பண்ணைபோன் றனவே

அடியுறை மகளி ராடுந் தோளே

நெடுவரை யடுக்கத்து வேய்போன் றனவே

வாகை யொண்பூப் புரையு முச்சிய

தோகை யார்குரன் மணந்து தணந்தோரை

நீடன்மின், வாருமென்பவர் சொற்போன் றனவே நாண்மலர்க் கொன்றையும் பொலந்தார் போன்றன மெல்லிணர் வேங்கை வியலறைத் தாயின அழுகை மகளிர்க் குழுவை செப்ப நீரயற் கலித்த நெரிமுகைக் காந்தள்

வார்குலை யவிழ்ந்த வள்ளிதழ் நிறைதொறும் விடுகொடிப் பிறந்த மென்றகைத் தோன்றிப் பவழத் தன்ன செம்பூத் தாஅய்க்

கார்மலிந் தன்றுநின் குன்று போர்மலிந்து சூர்மருங் கறுத்த சடர்ப்படை யோயே கறையில் கார்மழை பொங்கி யன்ன நறையி னறும்புகை நனியமர்ந் தோயே அறுமுகத் தாறிரு தோளால் வென்றி நறுமலர் வள்ளிப் பூநயந் தோயே கெழீஇக் கேளிர் சுற்ற நின்னை