உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இளங்குமரனார் தமிழ்வளம் - 35 ஓ

எழீஇப் பாடும் பாட்டமர்ந் தோயே

பிறந்த ஞான்றே நின்னை யுட்கிச்

சிறந்தோ ரஞ்சிய சீருடை யோயே இருபிறப் பிருபெய ரீர நெஞ்சத் தொருபெய ரந்தணர் அறனமர்ந் தோயே

அன்னை யாகலின் அமர்ந்தியா நின்னைத் துன்னித் துன்னி வழிபடு வதன்பயம் இன்னு மின்னுமவை யாகுக

தொன்முதிர் மரபினின் புகழினும் பலவே.

கேசவனார் பாட்டு. இசையும் அவர்; பண்நோ திறம்.

பதினேழாம் பாடல் :

தேம்படு மலர்குழை பூந்துகில் வடிமணி ஏந்திலை சுமந்து சாந்தம் விரைஇ

விடையரை அசைத்த வேலன் கடிமரம்

பரவினர் உரையொடு பண்ணிய விசையினர் விரிமலர் மதுவின் மரநனை குன்றத்துக் கோலெரி கொளைநறை புகைகொடி யொருங்கெழ

மாலை மாலை அடியுறை யியைநர்

மேலோர் உறையுளும் வேண்டுநர் யார் ஒரு திறம், பாணர் யாழின் தீங்குர லெழ ஒரு திறம், யாணர் வண்டின் இமிரிசையெழ ஒருதிறம், கண்ணார் குழலின் கரைபெழ ஒருதிறம், பண்ணார் தும்பி பரந்திசை யூத ஒரு திறம், மண்ணார் முழவின் இசையெழ ஒருதிறம், அண்ணல் நெடுவரை அருவிநீர் ததும்ப ஒருதிறம், பாடல்நல் விறலியர் ஒல்குபு நுடங்க ஒருதிறம், வாடை யுளர்வயிற் பூங்கொடி நுடங்க ஒருதிறம், பாடினி முரலும் பாலையங் குரலின் நீடுகிளர் கிழமை நிறைகுறை தோன்ற ஒருதிறம், ஆடுசீர் மஞ்ஞை அரிகுரல் தோன்ற மாறுமா றுற்றனபோன் மாறெதிர் கோடல் மாறட்டான் குன்றம் உடைத்து : பாடல் சான்று பல்புகழ் முற்றிய