உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலின் நுவல்வு

தமிழ்மொழி, தொன்மை முன்மை தனிமை இயன்மை முதலிய பதினாறு தன்மைகளைக் கொண்ட முதன்மொழி என்பார் பாவாணர். இயற்கையிலே கருத்தாங்கி இனிமையிலே உருவெடுத்து இயலும் மொழி தமிழ் என்பார் திரு.வி.க. இத்தமிழின் சொல்லமைதியும், இதன் சொல்லமைதி நெறி முறையும் தனிப்பெருஞ் சிறப்பின : தணியா இன்பக் கொள்ளை யாய்த் தளிர்க்கச் செய்வன. இவற்றுக்கு ஒரு சிறு சான்றாக வெளிவருவது வேர்ச்சொல் விரிவு என்னும் இச்சொல்லாய்வு நூலாம்.

ஒரு சொல்லின் அடிப்பகுதி அல்லது முதனிலைப் பகுதி வழியே கிளைக்கும் சொற்களெல்லாம், எப்படி அவ்வடிப் பொருள் மாறாமல், பலப்பல பொருள்களுக்கும் தகத்தக இடையும் ஈறும் திரிந்தமைகின்றன என்பதை ஈண்டு எடுத்துக் காட்டியுள்ள சொல் வரிசையைக் கண்டாலே புரியவரும்.

இங்கே காட்டப்பட்ட மும்முதல்களும் (பர-பரி-பரு) 'பர்' என்பதன் வழிவந்தவை என்பது வெளிப்பட விளங்கும். 'பர்' அகரமேற்றுப் 'பர' என ஆதலால், அதன்வழிச் சொற்கள் பரவுதல் பொருளிலும், இகரமேற்றுப் 'பரி' என ஆதலால், அதன்வழிச் சொற்கள் வளைதல் பொருளிலும், உகரமேற்றுப் 'பரு' என ஆதலால், அதன்வழிச் சொற்கள் திரளுதல் பொருளிலும் ஒன்றன் வளர்ச்சியில் இருந்து ஒன்றன் வளர்ச்சியாய்ச் சிறத்தல் செவ்விதின் அறியவரும். இவ்வாறே பிறபிற வேர்வழிச் சொற்களும் ஒரு தெளிவான திருத்தமான - திட்டமான அமைப்பிலேயே செல்லுதல் ஆய்வுடையார் கண்டு கொள்ளக் கூடியவேயாம்.

-

சொற்களெல்லாம் இடுகுறியே' என்பார் உளர். அவர், திரிபில் திரிபு மொழியை ஆய்ந்து அவ்வாய்வை, இயன் மொழிக்கும் சூட்டி மகிழ்பவர்; அவர் மகிழ்வைத் தடுப்பார் எவர்? மெய்ம்மை நிலைநாட்டப் படுங்கால்- கொள்வோர் கொள்வகை அறிந்து அவர் கொள்ளுமாறு தெளிவித்து நிலை நாட்டப் படுங்கால் - அவர் பிறர்க்கெல்லாம் முன்னவராக இருப்பர் என்பதில் ஐயமில்லை. எதிர்க்கொள் கண்டு இரைந்தோ

-