உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

ஒரு மொழியின் வளத்தை அதில் அடங்கியுள்ள சொற்களே எடுத்துக் காட்டும். சொல் வளத்தைக் கொண்டு மொழி வளரும்; ஒரு மொழியின் நிலையான வளர்ச்சி என்பது அம்மொழியில் முன்னரே உள்ள வேர்ச் சொற்களைக் கொண்டு பொருளுக் கேற்றவாறு விரிவாக்கி உருவாக்கும் சொற்களால் ஏற்படும்.

அவ்வாறாயின் அம்மொழி வேர்ச்சொற்கள் கூடுதலாக உள்ள மொழியாக இருக்கவேண்டும். அல்லது அம்மொழி யிலுள்ள வேர்ச்சொற்கள் அனைத்தையும் ஆய்ந்து, ஒவ்வொரு வேர்ச் சொல்லும் எவ்வெவ்வாறு ஒட்டுதல் பெற்று வளர்ந் துள்ளன என்பதைக் கண்டு பிடித்தல் வேண்டும்.

இந்த முயற்சியில், தமிழ்மொழி வேர்ச்சொல் ஆய்வுப் பணியில் மாகறல் கார்த்திகேய முதலியார், சுவாமி ஞானப் பிரகாசர், மறைத்திரு மறைமலையடிகள், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் போன்றோர் ஈடுபட்டுத் தமிழுக்கு அரும்பணி ஆற்றியுள்ளனர்.

இவ்வழியில் கழக இலக்கியச் செம்மல் புலவர் இரா. ளங்குமரன் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு அவ்வப்போது அரிய சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வருகிறார்கள்.

இந்நூலில் 'பர்' என்ற வேரின் அடிப்படையாகத் தோன்றி பல சொற்களை ஆய்ந்து மிகத் தெளிவாகவும் மிக நுண்மையாக வும் ஆய்வு செய்துள்ளார்கள். தமிழ் மொழி ஆய்வாளர்கட்கு இந்நூல் பெரிதும் பயன்படும்.

தமிழன்பர்களும் தமிழ் மாணவர்களும் இதனை வாங்கிப் படித்துப் பயன்பெறுவார்களாக.