உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

மீண்டும் மீண்டும் தூண்டுதலும் செய்கின்றனர். வரவேற்பும் தூண்டுதலும் கூட ஒரு நூல் உருவாதற்குக் கரணியமாதல் உண்டன்றோ! என் பணியார்வமும் அன்பர்கள் தூண்டுதலும் இணையின், இரட்டைக் காளைகளால் இழுத்துச் செல்லப்படும் வண்டியென இயலுதல் வாய்க்குமன்றே! அவ்வகையால் இந்நூல் கிளர்ந்த தென்க.

சிங்கபுரச் செல்வர் தனித்தமிழ்ப் பேரார்வலர் வணிக இயற் கல்லூரி முதல்வர் கோவலங் கண்ணனார் தம் 'தமிழ் வளர்ச்சிப் பண்ணை'யின் சார்பிலே 'அகல்' நூலுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டுச் செய்வித்தார். அந்நூலே அவரை என்னொடும் இணைத்து வைத்ததுடன், இன்றமிழ்த் தொண்டுப் புரவலராகவும் ஆக்கி வைத்தது என்பதை இந்நூல் முகப்பிலே சுட்டுதல் மகிழ்விக்கின்றது.

அகல் நூல் வெளியீட்டின்போது தாமரைச் செல்வர் தனிப் பேரின்புற்றார். தமிழ் வளச் சீர்மையில் தழைத்தார். அவ்வரிசை வருதற்குத் திட்டம் தந்து ஊக்கினார். இந்நாள் அவர்கள் பொறையைத் தாங்கி அவர்கள் வழியிலே கடப் பாடாற்றிச் சிறந்துவரும் மருகர் கழக ஆட்சியாளர் திரு. இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் இந் நூலைத் தமிழுலாக் கொள்ளச் செய்கின்றனர். அவர்களுக்கு நன்றி பெரிதுடையேன்.

பாவாணர் ஆராய்ச்சி நூலகம்,

தமிழ்ச் செல்வம்,

திருநகர், மதுரை -6.

தமிழ்த் தொண்டன்,

இரா.இளங்குமரன்.