உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பர் :

1. “பர்-பர”

தமிழ்ச் சொற்களின் வேர்களுள் ஒன்று 'பர்' என்பது. 'பர்' என்பது குறிலொடு கூடிய ஒற்று. அவ்வொற்றும், 'ரகர' ஒற்று. ஆகலின் 'பர்' எனச் சொல் வடிவம் பெறாது. அவ்வாறு வடிவம் பெற்றால், அது வேற்றுமொழிச் சொல் என்றோ - வேற்று மொழியாளர் தம்சொல்லாகத் திரித்துக் கொண்ட சொல் என்றோ -உறுதிப்படுத்தலாம்.

எ-டு : பர்த்தா வட சொல்.

பர்வம் - 'பருவம்' என்னும் தென் சொல்லின் வடமொழித் திரிபு. பருவம் தமிழ்ச் சொல்லாதல் அச்சொல் வரிசையில் காண்க.

பர :

பர் என்னும் வேர், அகரத்தோடு சேரப் 'பர' என்றாகும். பர என்னும் விரியின் வழியே, விரியும் சொற்கள் பல, அகர முதலிகளில் அடைவு செய்யப்பட்டவை; செய்யப் படாதவை; இலக்கிய ஆட்சியுடையவை, பொதுமக்கள் வழக்கில் உள்ளவை; பொதுவழக்காக உள்ளவை, வட்டார வழக்காக உள்ளவை எனப் பலவகைப்பட்டவையாம். அவற்றுள் தொகுத்துக் கூற வாய்த்தவை மட்டும் இவண் சொற்பொருள் விளக்கம் செய்யப் படுகின்றன. ஆகலின், இது விரிவுக்குரியது என்பது உண்மை. 'இச்சொல் இல்லையே' எனப் பெரிதும் வழக்கிலுள்ள ஒரு சொல், தூண்டலாம். 'இச்சொல் இடம் பெற்றுள்ளதே' என ஒரு சொல், நினைவினை எழுப்பலாம். முன்னது தமிழ்ச் சொல் அன்று என்னும் தெளிவால் இடம் பெற்றிலது என்றும், பின்னது தமிழ்ச் சொல் என்னும் முடிவால் இடம் பெற்றுள்ளது என்றும் கொள்ள வேண்டும் என்பது ஒரு குறிப்பு. இதனால், இத் தொகுப்புக்கு வாயாமல் விடுத்த சொற்களைப் பற்றி முன்னெழுதிய முடிவு, மாற்றத்திற்குரிய தில்லை எனக் கொள்க. தமிழின் சொல்லியல் முறையும் பொருளியல் முறையும் எத்தகைய