உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

-

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

-

திட்டமான ஒழுங்கான வரம்பமைந்த சீர்மைக்குரியவை என்பதை வெளிப்பட அறிவதற்குச் சான்றுகள் பலவுள. அவற்றுள், 'பர்' என்னும் இவ்வேர்ச் சொல் ஆய்வு அதனை வெள்ளிடை மலையெனத் தெளிவுறக் காட்டும்."இப்படியும் ஒரு மொழியமைதி வாய்க்குமா? என்னும் வியப்பும்," இவ்வாய்ப்பை, ஆழ்ந்து அகன்ற நுண்மையால் கண்டும், கட்டுமானம் இட்டும், காத்தும், பரப்பியும் வந்த நம்முந்தை நன்மக்கள் பெறலரும் பெருந்திறம் எத்தகை பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் காத்தலுக்கும் உரியது என்னும் கடப்பாட்டுணர்வும், உணர்வுடையார்க்கு உண்டாதல் இயற்கை,

ஏனெனில், 'உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே' என்பது தொன்னூலாசிரியர் தேர்ச்சியுரை என்க. மற்றொரு தேர்ச்சியும் அவர், தம் பின்னோர்க்கு வைத்துச் சென்றார். அதனைப் பிறழ உணர்ந்தார் பிறபிற உரைத்து, இலக்கணர் தம் எண்ணம் அறியாராய்த் தம்மெண்ணம் உரைத்து, நல்லது செய்தல் தவிர்ந்ததுடன், அல்லது செய்தலிலும் தலைநின்றனர்! தலைமையாயும் நின்றனர்!

“எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே"

(தொல்காப்பியம்)

என்பது மூலவர் ஆணை! அவ்வாணை, அவருக்கு மூலவருக்கு மூலவர் - வழி வந்த ஆணை! இப்படியோர் ஆணையை உரைப்பது பொருந்துவதன்றாயின், இவர் காலத்தவர் இவர் புலமைக் காய்ச்சலர்-இதனை ஏற்பரோ?

-

இந்நாள்போல் ஒரு நூல், எக்கருத்திலும் எப்பொருளிலும் எவ்வடிவிலும் வெளிப்படலாம் என்னும் நிலையில், வெளிவந்த நூலா தொல்காப்பியம்? மாப்பெரும் புலவர் அதங்கோட்டா சிரியர் தலைமையில் ‘அரில்’தப, அவரும் அவையோரும் ஆய்ந்து, வெளிப்பட்ட நூல் எனத் தொல்காப்பியனாரின் ஒரு சாலை மாணவர் எனப்படும் பனம்பாரர் பகர்கின்றாரே! நிலந்தரு திருவின் நெடியோன் எனப்படும் வேந்தன் கூட்டிய அவையம் எனின், நாட்டிலிருந்த நல்லறிஞர் எல்லாரும் குழுமியிருந்து ஆய்ந்திருப்பர் -கேட்டிருப்பர் என்பதில் ஐயமுண்டோ? அதிலும், அதங்கோட்டாசிரியராம் தலைவர், 'அறங்கரை நாவர்' எனின், அவர் முறைப்பட ஆய்ந்த ஆய்வு, செம்முறையாக வன்றி எம்முறையாக இருத்தல்கூடும்? தலைவருக்கு இல்லாத ஆணையா பிறருக்கு?" எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்பது

-