உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேர்ச்சொல் விரிவு

89

பொருந்துவதன்றாயின், அந்நூற் பாவையேனும் எடுத்துவிடக் கூறியிருப்பரே! திரைப்படத் தணிக்கை இன்ன வற்றில் 'பகுதி வெட்டல் இல்லையா?

66

'ஆயின், எல்லாச் சொற்களும் பொருள் குறித்தன என்பது விளங்கவில்லையே; பல சொற்கள் காரணமிலா இடுகுறிச் சொல்போல் உள்ளனவே; அதனால் தானே 'இடுகுறி காரணப் பெயர் பொதுச் சிறப்பின' (62) எனப் பின்னூலாராம் நன்னூலார் கூறினார்" என்பார் உளராயின், அதற்குத் தக்க மறுமொழியை ஆசிரியர் தொல்காப்பியர் சொல்லதிகார இறுதியில் தெளிவாக உரைத்தார்:

"எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே" என்பதை, நால்வகைச் சொற்களில் முற்படு சொல்லாம் பெயர்ச்சொல் இலக்கணம் கூறும் இயலின், முதல் நூற்பாவாக வைத்த அவர், சொல்லிலக்கண நிறைவிலே, "மொழிப் பொருட்காரணம் விழிப்பத் தோன்றா" என்பதை வைத்தார்.

'விழிப்ப' என்பது 'பார்க்க' என்னும் பொருளது. சொல்லின் பொருள் பார்த்த அளவால் வெளிப்படத் தெரியாது. ஆழ்ந்து சென்று அறிய வேண்டும்; அறிய முடிந்தாலும் முடியாவிட்டாலும் அதற்குப் பொருள் உண்டு என்பது மட்டும் திட்டமான செய்தி என்பவை இந்நூற்பா விளக்கமாம்.

"கடற்கரையில் ஓடிவிளையாடும் சிறுவன், சில சிப்பிகளைப் பொறுக்குவது போலச் சில அறிவியல் நுணுக்கங்களைக் கண்டேன்; அவ்வளவே" என்றானே ஓர் அறிவியல் அறிஞன்! அந்நிலை மொழியியலுக்கு இல்லையா?

ஆழச்சென்று முக்குளிப்பானும் அனைத்து முத்தும் எடுத்துவிடுவதில்லை என்பதை எவரே அறியார்? அவரவர் முயற்சி, ஆர்வப்பெருக்கு, அயராமை இன்னவற்றின் அளவுக்கு ஏற்பக், கண்டு பிடிப்புகள் கையகப்படுகின்றன என்னும் தெளிவுண்டானால், அத்தெளிவு சொல்லாய்வுக்கும் உரிய தெனக் கொள்ளலன்றோ முறைமை! இதனால், மொழி ஞாயிறு பாவாணர்,"ஐம்பது அறுபது விழுக்காடு சொற்களுக்கு வேரும் விளக்கமும் பொருளும் கண்டாலும் போதும்; பின்னர் எஞ்சியவற்றைக் கண்டு கொள்வர்; எத்தகை பெருமூளையர் எனினும் அவர் நூற்றுக்கு நூறு சொற்களுக்கும் பொருள் காணமுடியும் எனக் கருத வேண்டியதில்லை" என்பார். இக் குறிப்பை நினைந்து, நூற்றுமேனிக்கு ஒரு பத்துச் சொற்களின்