உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

குறிக்கும் வழக்குச் சொற்கள். இவையெல்லாம், பரவுதல் விரிதல் பொருளன என்பது வெளிப்படை.

பரம் :

மேலானது, உயர்ந்தது, அப்பாலானது, அப்பழுக்கு இல்லாதது முதலிய பொருள்களைத் தரும் சொல் 'பரம்' என்பதாம். பரம்பொருள், பரமன், பரதேயி, பரமானது என்ப வற்றில் இப்பொருள்கள் முறையே அமைந்திருத்தல் அறிக.

'கடவுள்' என்பதிலுள்ள கடந்த என்னும் பொருள் 'பரம்' என்பதிலும் உண்மையைக் 'கடல், பரவை' என்பவற்றொடும் எண்ணிக் கொள்க.

மொழிபெயர் தேயத்தரே இரந்துண்பாராக இருந்த நாளில் எழுந்த சொல்லாட்சி 'பரதேயி' என்பதாம். 'பரதேசி' என வழங்குதல் 'தேஎம்' 'தேம்' தேயம் என்பவை தேசமென வேற்றுச் சொல்லாகக் கொள்ளப்பட்டதன் பின்னை வடிவமாம்.

பரம் என்பது பாரம் என்னும் பொருளிலும் வரும். பரவிய இடம் 'பார்' எனப்படுதல் போல், பரவிய சுமை 'பாரம்' ஆயிற்று. பாரவண்டி, பாரச்சட்டம், பார், என்பவற்றை எண்ணுக.

“நிரைப் பரப் பொறைய நரைப்புறக் கழுதை”

எனக் கழுதையின் முதுகில் இருபாலும் சுமை ஒழுங்குபட அமைத்துச் செல்லும் முறைமை அகப்பாட்டிலே விளங்கு கின்றது (207). கழுதையின் முதுகுப் பரப்பினும் மிக்கு இருபாலும் நிரந்து பரந்து கிடக்கும் சுமை. 'நிரைப்பரம்' என்னும் சொல்லாட்சியால் விளங்குதல் நயமிக்கதாம்.

கள்ளமில்லாத வெள்ளைத் தன்மையைப் 'பரம்' என்பதும், அத்தகையரைப் 'பரமானவர்' என்பதும், அவர்தம் போக்கினை - செயலினைப் 'பரம் போக்கு' என்பதும் வழக்கில் உள்ளமை அறியத் தக்கன. 'பரமேளம்' என்பதும் பரம்போக்கே.

.

அகன்ற வாயையுடைய அகல்வாய்ச் சட்டியைப் 'பரவச் சட்டி' என்பதும், அயலே இருந்து வரும் வாக்கைப் ‘பரவாக்கு' என்பதும் நினையலாம்.

உடலுக்குப் 'பரம்' என்பதொரு சொல்லுண்டு. பரம், பாரம் என்னும் பொருளது. உடலைக் கொண்டே உயிர்வாழ்வு இயல்வது என்றாலும், உடலைக் கொண்டே அருள் தொண்டு இயல்வது என்றாலும், அவ்வுடலைப் பேணிக் கொள்ள வேண்டிய