உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேர்ச்சொல் விரிவு

103

"தென்பரதவர் போரேறே" எனவரும் மதுரைக் காஞ்சி (144) மன்னரைக் குறிக்கும். மீன்விலைப் பரதவர் எனவரும் சிலம்பு (5: 25) நிலமக்களாம் வினைமக்களைக் குறிக்கும். 'கொடுந்திமில் பரதவர் குரூஉச் சுடர்” எண்ணுதலைப் பட்டினப்பாலையும் (112) "பழம்படுதேறல் பரதவர் பருகுதலைச்" சிறுபாணும் (159) பாடுகின்றன.

அரசர்களால் எட்டிப் பட்டம் பெற்றவராகவும், கடல் வணிகராகவும் இருந்தமையால் வணிகரும் பின்னாளில் பரதவர் எனப்பட்டனர். “பரதவர் கோத்திரத்த மைந்தன்" (உபதேச. சிவத். 189) என்பதை அறிக.

பரதவர் என்பார் பரதர் என வழங்கப்பெற்ற குறிப்பும் பல்நூல்களின் வழியே அறியப்பெறுகின்றது.

"பரதர் மலிந்த பல்வேறு தெரு”வைக் காட்டுகிறது பெரும்பாண் (323).

"

"பரதர் தந்த பல்வேறு கூலத் தைக் காட்டுகிறது மதுரைக் காஞ்சி (317).

பரப்பு :

பரவச் செய்தல், அகல விரித்தல் ஆகிய பொருள் வழியாகப் பரப்புதல் என்னும் தொழிற்பெயர் வரும். 'பரப்பு' என ஏவலாகவும், பெயராகவும் நிற்றல் உண்டு. பரப்பு இடவிரிவு என்னும் பொருளது. மண்ணிடம், வானிடம், கடலிடம் ஆகிய இடவிரிவுகளைப் பொதுவாகச் சுட்டலும், தனித்தனியே சிறப்பாகச் சுட்டலும் உண்டு.

நெற்பரப்பு நிலைப்பரப்பு என்றிரு வகையான நில அளவைச் சுட்டுகின்றது செ.ப. க. அகராதி. கதவு நிலையின் மேலுள்ள மண்தாங்கிப் பலகையையும் பரப்பு எனலுண்டு.

கணக்கு வகையில் 'பரப்பளவு காணல்' என்பதொன்று பரப்பளவுக்கெனத் துறையே அமைந்துள்ளது. விரைவு, சுருசுருப்பு, தினவெடுத்தல் என்னும் பொருளில் பரபரத்தல், பரபரப்பு என்பவை வழக்கில் உள்ளன.

ஒழுங்காக இரு; இல்லையானால் அடிவாங்குவாய் என்னும் பொருளில், உடம்பு என்ன பரபரக்கிறதா? என்று வினாவுதல் கேட்கக்கூடிய வழக்கு. பரப்பாழ், 'பப்பரப்பாழ்' என்பன திறந்தவெளி. வான்வெளி என்பவற்றைப் பொதுமக்கள் இயல்பாகக்