உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேர்ச்சொல் விரிவு

111

யாழ்கோடு செவ்விது என்றாரே வள்ளுவர். கோடு வளைவு அன்றோ! மலைக்குக் கோடும், மரத்திற்குக் கோடும் வந்தமை வளைவால் தானே!

ஆகலின் பரவும் ஒன்று வளைதல் அல்லது வட்ட மாதல் இயற்கை நியதி. இது கொண்டு 'பர்' என்பதொடு இகரம் சேர்ந்த, 'பரி' வழிச் சொற்கள் வளைதல் பொருள் தருதல் தமிழியல் என்க.

வளைதலால் வந்தபெயர் வளை; வளையல்; வளசல். இவற்றில் வளைவுகளில் ஓரளவும் உண்டு; பேரளவும் உண்டு; முழுதுறும் வளைவும் உண்டு 'பரி' முதற் சொற்கள் வளைதற் பொருளில் வருதலைக்காண்போம். வளைதலின் அடிக்கருத்து எப்படி எப்படி அமையுமென விளக்குகிறார் பாவாணர் :

'வளைதற் கருத்து இயன் முறையில் வளைவு, சுருட்சி, வட்டம், வளையம், உருண்டை, உருளை முதலிய பண்புக் கருத்துக்களையும்; செயன் முறையில் வளைதல், சுருள்தல், திரிதல், சூழ்தல், சுற்றுதல், உருளுதல் முதலிய வினைக்கருத்துக் களையும் தழுவும்.

வளைவு என்னும் பண்பின் பெயரும், வளைதல் என்னும் வினையின் பெயரும் அப்பண்பையும் வினையையும் கொண்ட பொருள்களை ஆகுபெயராகக் குறிக்கும்.

கோணல், சாய்தல் என்பன வளைதலின் முந்திய நிலை தலின், அவையும் அதனுள் அடங்கும் (வேர்ச்சொற் கட்டுரைகள் -155)

பரி :

அச்சத்தாலோ, ஒரு நோக்கத்தாலோ ஓடும் ஓட்டம் அன்றி மற்றை ஓட்டம் எல்லா உயிரிகளுக்கும் பொதுவாக வட்டமிடல், வளைதலாகவே இயலும். அவ்வகையில் தன் பெயரைப் பெற்ற விலங்கு குதிரை. அது குதித்துக் குதித்து ஓடுதலால் குதிரைப் பெயரும், வளையமிட்டுச் செல்லுதலால் பரிப் பெயரும் பெற்றது. அதன் ஆற்றல் திறமே, அறிவியல் மூளையில் பரியாற்றலாய் (Horse Power) மின்னளவீடாக இயல்கின்றது.

வளைதலால் பரிப்பெயர் பெற்றதன் நடையும், ஓட்டமும் பரி எனப்பட்டன.