உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பர்-பரி :

66

2. "பர்-பரி

பர் என்னும் வேருடன் இகரம் சேர்தலால் 'பரி' என்னும் சொல்வடிவம் பெறுகின்றது. அகரம் சேர்தலால் பர் என்பது பரவுதல் பொருள் தந்ததுபோல், இகரம் சேர்தலால் வளைதல் பொருள் தருகின்றதாம்.

பரவிய ஒன்று வளைதல் இயற்கை; உலகியல் அத்தகைத் தென உற்று நோக்குவார் தெளிவாக அறிவர்.

உலகுக்கு அண்டம் என்பதொரு பெயர். அதன் வடிவம் வட்டம் என்பதைக் காட்டும் பெயர் அது. விதை, முட்டை என்பனவும் அண்டம் என்பதன் பொருளவே. அப்பொருள் வடிவம் வட்டத்தின் வழிப்பட்டனவே.

திங்கள் ஞாயிறு விண்மீன் இவற்றின் வடிவெல்லாம் வட்டமே. கடல் வலயம் என்பதால் கடல் வட்டம் புரியும். 'நீராரும் கடல் உடுத்த நிலம்', 'புடவிக்கு அணி துகில் என வளர் அந்தக் கடல்' என்பன கடல் வட்டம் குறிப்பன.

நீர்நிலையில் ஒரு கல் விழுந்தால் வட்டம் கிளர்ந்து வளர்ந்து வளர்ந்து பெரு வட்டமாதல் அறியார் எவர்? நீர்ச்சுழி வட்டமே. மழைத்துளி வடிவம் வட்டமே. அது விழும் வடிவம் வட்டமே. காற்றுக் கிளர்வதும் தீ எழுந்தெரிவதும் வட்டமே. வானின் தோற்றம் வட்டமே. ஆடுமாடு முதலாம் விலங்குகள் படுத்தல் வட்டமே. ஆடையின்றி வாடையில் மெலியும் மாந்தன் படுத்திருக்கும் நிலையும் வட்டமே. பறவைக் கூடுகள் வட்டமே; அவற்றின் உலாவலும், வண்டின் சுழல்வும் வட்டமே. பூவும் வித்தும் கனியும் காயும் தவசமும் வட்டமே! தனித்தனி சொல்வானேன்? குழந்தை கையில் கரியோ சுண்ணமோ எழுதுகோலோ கிடைத்தால் இயல்பாக வரைவது வட்டமே. வளையாமல் வட்டமேது?

ஏன்; கோடு என்பதே வளைவு என்னும் பொருளதே. கோட்டம், கோட்டை இவையும் வளைவே. "கணை கொடிது