உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரா :

வேர்ச்சொல் விரிவு

109

பரக்கப் பார்த்தல், பராக்குப் பார்த்தலாக வரும் என்பதைக் குறித்துளோம். பர என்பது பரா என்றாகியும் பரவுதல் பொருள் தரும். பராகம் என்பது பூம்பராகம் எனப்படும் பூம்பொடி (மகரந்தப்பொடி). இதன் பொருளினின்று பரவும் தூள், பொடி ஆகியவற்றைக் குறிப்பதாகவும் பராகம் அமைந்தது. ‘பராம்' எனத் தொகுத்தும் அப்பொருள் தருவதாயிற்று.

பரவிக் கிடக்கும் பாலைவனம் 'பராடம்' எனவும், பருத்த அடிமரம் 'பராரை' எனவும், பருத்த மேல் தொடை ‘பராரை’ எனவும் (பொருந. 104) வழங்குகின்றன. பரவுதல் பராவுதலாக வருதல் அறிந்ததே.