உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

பழம் புண்ணுற்றான் ஒருவன் படுக்கையில் புரள்கிறான்; அவன் புரளல் போல் அலை புரள்கிறது கடலில்; அது, முழவென முழக்கமும் செய்கின்றது என்கிறது நற்றிணை. (394)

“முழங்குதிரை முழவின் பாணியின் பைபயப் பழம்புண் ணுறுநரின் பரவையின் ஆலும்”

என்பது அது. இவண் பரவை புரளற் பொருளது; புரளல் பரவல் தானே.

'பரவை யமுது' என்பது உப்பையும், 'பரவையாழ்' என்பது பேரியாழையும் 'பரவை வழக்கு' என்பது உலக வழக்கையும் குறிக்கும்.

'பரவைப் புல்வரி' என்பது, பரந்த புல்வெளியில் கால்நடை மேய்தற்காகப் பெறப்பட்ட ஒரு வரிப் பணமாகும். பரவையார் :

ஆடல் அழகு கலைநலம் ஆகியவற்றால் பரவிய புகழ் வாய்ந்த ஒருவர் பரவை நாச்சியார்; சுந்தரர் மனையாட்டியருள் ஒருவர். அவர் பெயரைக் குறிக்கும் சேக்கிழார்,

“பேர்பரவை பெண்மையினிற் பெரும்பரவை விரும்பல்குல் ஆர்பரவை யணிதிகழும் அணிமுறுவல் அரும்பரவை சீர்பரவை யாயினாள் திருவுருவின் மென்சாயல் ஏர்பரவை யிடைப்பட்ட என்னாசை எழுபரவை'

என்கிறார். (பெரிய. தடுத்தாட்கொண்ட. 148) பரன் :

=

=

அயன்மையான் என்னும் பொருள் தருவதுடன் இறைவன் என்னும் பொருளும் தரும் சொல் பரன். பொறிபுலன்களுக்கு அப்பாலான் என்னும் இறைமைக் கொள்கை வழி வந்த சொல் பரன்; பர்+அன் பரன்; இனிப் பரம்+அன் பரமன் என்றும், ஈரொட்டுகள் சேர்ந்தும் இறைவனைக் குறிக்கும். பரமாய பொருள் பரம்பொருள் என முந்து கண்டதையும் நினைக. பரன் சிவன், திருமால், அருகன் முதலாம் பல கடவுளரையும் குறிக்கும் சொல்லாகத் தமிழ் நிகண்டுகளும் அவ்வச் சமய நூல்களும் சுட்டுதல் அறியத்தக்கது.