உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேர்ச்சொல் விரிவு

107

பரம்+வயம் = பரவயம்; பரவயமாவது மகிழ்ச்சி. தன்வய மிழக்கையாம். அதனை,

“மயலெலாம் ஒழிந்து பரவசமாம் காலம்”

என்றார் சிவப்பிரகாசர்.

'இலைவய'மாகத் தந்த கொடைப்பொருள் - வெற்றிலை யில் வைத்துத் தந்த பொருள் - 'இலவசம்' என்றானாற்போலப், பரவயம் 'பரவசம்' ஆயிற்றாம்.

பரவர் என்பார் பரதவர் என்பதைக் கண்டுள்ளோம். பரவுதல், பரவல் என்பவை பரவிச் செல்லுதல் வழிவந்த சொற்களே. பரவலாகப் பேசப்படுதல் என்பது பலராலும் பலவிடத்தும் பேசப்படுதலாம். 'பரவுதல்', வாழ்த்துதல் பொருளில் வரும் என்பதை முன்னரே கண்டுள்ளோம். பராவுதல் என்பதும் அப்பொருளதே.

CC

'ஏனை ஒன்றே

தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே'

""

எனத் தேவர்ப் பராவும் கலிவகையைக் குறிப்பார் தொல்காப்பியர். (செய்.137)

பரவுக்கடன்

தெய்வத்திற்கு நேர்ந்து கொண்ட நேர்வு அல்லது நேர்த்திக் கடன் 'பரவுக்கடன்' எனப்படும். கொற்றவைக்குப் பரவுக்கடன் பூணலைக் குறிக்கிறது தொல்காப்பியம். (பொருள். 58)

பரவெளி :

பரம் வெளி - பரவெளியாம்; பரவெளி இறையுறையும் வானிடம் எனப்படும் விண்வெளி என்பதும் அது. பரவெளியை "வறிது நிலைஇய காயம்" (30) என்று புறநானூறு கூறும்."ஓர் ஆதாரமும் இன்றித் தானே நிற்கின்ற ஆகாயம்" என்பது இதன் பழையவுரை. காயம் என்னும் தென்சொல் ஆகார முன்னொட்டுக் கொண்டு வடசொல்லாயிற்று.

பரவை :

கடல் என்னும் பொருள்தரும் பரவையை முன்னர்க் கண்டுள்ளோம்.