உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேர்ச்சொல் விரிவு

113

பாலதாம். "நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்' என்னும் காதலன்பிற்குன்றியதோ அத் தாயன்பு?காதல் முருகி முருகி வளர்ந்து, அருணிலைக் காதலாய்ப் பெருகிய தல்லவோ தாய்மை?

பரி என்பதற்கு வருந்துதல் பொருளும் உண்டு. இதன் மிகையைக் காட்டப் 'பரிபுலம்புதல்' என்னும் ஆட்சியும் உண்டு.

“பக்கம் சேர்ந்து, பரிபுலம் பினனிவன் தானே தமியன் வந்தனன் அளியன்"

என்பது சாத்தனார் வாக்கு (மணிமே. 16:5 -58).

அன்புப் பொருளாம் 'பரி', வருந்துதல் - வருத்தம் ஆமோ? அது வருந்தாக்கால் எது வருந்துவது? அருளாளர் வரலாறுகள், தமக்கு வருந்துவதையோ பொருட்டாக்கியுரைக்கின்றன? பிறபிற உயிர்க்கு இரங்கி-பரிந்து இரங்கி -வருந்தும் வருத்தத்தையன்றோ புகல்கின்றன! ஆடு தூக்கிச் சுமந்த புத்தர் வரலாறும், 'தந்தையே இவரைப்பொறுத் தருளும்', என்ற கிறித்து பெருமான் வரலாறும், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் வரலாறும் அவர்கள் பிறவுயிர்களுக்காகத் துடித்த துடிப்பை யல்லவோ கூறுகின்றன. அவர்க்கென வந்த அல்லல் இல்லாமை யால் அன்றோ, "அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை" எனத் திட்டமாக உரைத்தார் திருவள்ளுவர். இதற்கு "வளிவழங்கு மல்லல்மா ஞாலம்" கரியாக (சான்றாக) இருத்தலைக் கண்டு தெளிக என வழிகாட்டினாரே! இவற்றையெல்லாம் எண்ணினால் 'பரி' என்பதற்கு வருத்தப்பொருள் வந்த வகை விளங்கும்.

ம்

பரி என்னும் சொல்லுக்குக் கண்ட குதிரை என்னும் பொருள் வழியாகச் சில சொற்கள் வளர்ந்துள்ளன. அவை பரிக்காரர், பரிக்கோல், பரிமா, பரிமுகம் என்பன.

பரிக்காரர் ஆவார் குதிரைக் காரர்; குதிரை நடத்துவோர்; பரிக்கோல்-குத்துக்கோல்; பரிக்கோற்காரர் என்பார் குத்துக் கோற்காரர்; இவர் யானைப்பாகர். மதத்தாற், பரிக்கோல் எல்லையில் நில்லாத களிற்றைக் காட்டுகிறது தொல்காப்பிய உரை (தொல்.பொருள். 17) பரிமா என்பது பரியாகிய விலங்கு. கரிமா, அரிமா போல வழங்கும் வழக்கு. பரிமுகம் குதிரைமுக வடிவாக அமைந்த விண்மீன் (அசுவிணி); பரிமுக வடிவில் அமைந்த படகு பரிமுக அம்பி எனப்பட்டது. 'பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும்" என்பது சிலம்பு (13: 176). பரிமுக மாக்கள்