உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

பரிச்செண்டு :

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

செண்டு வெளி என்பது குதிரை வட்டமிடும் வெளியைக் குறிக்கும். செண்டித்தல் என்பது துள்ளியோடல் என்னும் பொருளது. இன்றும் செண்டித்தல் அப்பொருளில் நாட்டுப் புறங்களில் வழங்குகின்றது. வளைபந்தைப் போட்டுத் துள்ளித் துள்ளியாடுதல் பரிச்செண்டு எனப்பட்டதாம். அவ்வாட்டம் நின்று கொண்டு ஆடுவதும் சுற்றிவந்து ஆடுவதும் என இரு வகைத்தாதல் பெரியபுராணத்தால் அறிய வருகின்றது.

“நிலைச் செண்டும் பரிச்செண்டும் வீசிமிக மகிழ்வெய்தி”

என்பது அது (சேரமான்126)

பரிசகம் :

வீடு,மனை,மாளிகை என்பவற்றின் வேறுபட்ட அமைப்பில் தனியே விளங்குமாறு கலைக்கூடங்களை அமைத்தல் வழக்கம். அதனை இந்நாள் காட்சிக் கூட அமைப்புகளாக அமைப்ப வற்றையும், நிலையாக அமைக்கப்பட்டுள்ளவற்றையும் கொண்டு தீர்மானிக்க முடியும். சுற்றி வருதற்கேற்ற வளைவான வடிவு கலைக்கூட அமைப்புக்கு உரியது என்பதைத் தெளிந்து அதற்குப் 'பரிசகம்' எனப் பெயரிட்டுப் போற்றியமை விளக்கமாகின்றது. விளக்குவது திருக்கோவையார் (78)

“படிச்சந்த மாக்கும் படமுளவோம் பரிசகத்தே” என்பது அது.

இப்பொழுது பரிசகமெனப் புத்தாட்சி ஒன்றும் நடந்து வருகின்றது. எந்தச் சூதை ஒழிக்க வேண்டும் என்றாரோ திருவள்ளுவர் அவர் பெயரையும் அவர் குறளையும் 'உலாப்போக விட்டு விட்டு அந்தச் சூது வழிப்பட்டதாம் பரிசுச்சீட்டை அரசே நடத்தி வருவது பாழில் பாழாம் செய்கை. அப்பரிசுச்சீட்டு விற்பனையகம் 'பரிசகம்' எனச் சில இடங்களில் 'பளிச்' சிடுகின்றது! பரிசு குலுக்கல், பரிசு வழங்கல் விழாக்களும் பரிய பரிய தலைகள் தலைமையில் நிகழ்கின்றன!

இருப்பதையெல்லாம் இழந்தாலும், ஏதோ ஒன்று விழுந்தால் விழுந்தது பரிசுதானே!

பரிசு :

பரிசம், பரிசில், பரிசு என்பவை கொடைவகையால் ஒன்றாயினும், பெறுவார் நிலை, பெறும் வகை இவற்றால்