உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேர்ச்சொல் விரிவு

"எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை”

என்பது புறம். (90)

115

55

இவ்வெழுமரம் கோட்டைக் கதவின் உட்புறத்தே குறுக்காகப் போடப்படும் வலியமரம். "எழூஉத் தாங்கிய கதவு' என்பதொரு புறப்பாட்டு (97) 'பரிகம்' என ஓர் இருப்புப் படைக்கலம் உண்டென உரைக்கும்.

பரிகலம் என்பது உண்கலமாகப் பயன்படும் வாழையிலை; குருத்தாக அறுத்து அதன் வளைவை விரித்துப் போடுதல் வழக்காக இருந்தமையின் பரிகலம் என வழங்கப்படுவதாயிற்று. "பரிகலக் குருத்து" என்றார் சேக்கிழார். (பெரிய. அப்பூதி. 27.) பரிச்சந்தம்:

சந்தம் என்பது நறுமணம், அமைதி, அழகு, இனிமை முதலிய பொருள்தரும் சொல். இத்தகைய பொலிவெல்லாம், திருவிழாவும் பெருவிழாவுமாம் அரச விழா, தெய்வ விழாக்களில் சூழவருதல் கண்கூடு. ஆதலால் பரிச்சந்தம் என்பது அரச பரிச்சின்னங்களைக் குறிப்பதாயிற்று.

“வீசுவெண் சாமராதி பரிச்சந்தம் முழுதும் விட்டார்"

என்பது மேருமந்தர புராணம் (1048)

பரிச்சின்னம் :

பரிச்சின்னம் என்பது அரச சின்னம். அவை குடையும் கோலும் ஊர்தியும் பிறவுமாய் அரசனைச் சூழ அமைந்தும் வந்தும் பொலிவுறுத்தும் அடையாளங்களாம்.

"மணிமுத்தின் பரிச்சின்னம் வரம்பின்றாகக்" காட்டுகிறது பெரியபுராணம் (திருஞான.1016). 'பரிவாரம்' என்பதையும் காண்க.

பரிச்சின்னம் என்பது நினைத்தவை நினைத்தபடி வைக்கப் படுபவையல்ல; இன்னவை இன்ன அளவு, இன்ன வகைத்து என வரம்பு கட்டப்பட்டு வருவது அல்லது அமைவதாம். அதனால் பரிச்சின்னம் என்பது அளவிட்டது அல்லது அளவு பட்டது என்னும் பொருள் பெற்றது.

66

'பரிச்சின்ன ஞானம் பரிய

என்பது சிவஞான முனிவர் நெஞ்சு விடுதூது (81)