உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

“பிள்ளை பரிசு இது என்றால்”

“நினைந்த அப்பரிசே செய்ய”

(பெரிய திருமொழி 33: 2) - இது தன்மை.

(பெரியபுராணம். மெய்ப். 15) - இது வகை.

“பரிசு-சிற்றோடம்”

செ. ப. க. அகராதி.

பரிசு, பெருமைப் பொருள் குறித்த பின்னர், 'பரிசு கெடுதல்' என்பது சீரழிவைக் குறிப்பதாயிற்று. பரிசு கெட்டவன்(ள்) பரிசை கெட்டவன்(ள்) என்பவை வழங்கு மொழிகள்.

பரிசு பெறுவார் ஓர் ஒழுங்கொடும், பணிவொடும் பெறு வராகலின், அப்பரிசுக்கு ஒழுங்கு, வழி என்னும் பொருள்களும் உண்டாயின.

"பரிசொடும் பரவிப் பணிவார்”

என்பது தேவாரம் (612 : 3).

பரிசை :

பரிசு 'பரிசை என ஐகாரம் பெறும். அது வெண் கொற்றக்குடை முதலாம் வெற்றி விருதுகளைக் குறிக்கும்.

பரிசை என்பதற்குக் கேடயம் என்னும் பொருளும் உண்டு. “நீடிய பரிசையே மாவட்டணம் நெடிய வட்டம்”

என்பது சூடாமணி நிகண்டு (7:18)

“வலயங்கற் பரிசை”

என்பது இராமாயணம் (உயுத்த. 1323 பா.வே).

பரிசை கேடயம் ஆகலின் அதனைப் பிடிப்பவன் பரிசைக் காரன் எனப்பட்டான். குடை பிடிப்போனும் அவ்வாறே பெயர் பெற்றான்.

பரிஞ்சு:

பரிஞ்சு என்பது இருபொருளுடன் வழங்குகின்றது. 'பரிந்து' என்னும் சொல் பரிஞ்சு எனப் போலி வடிவம் பெறுதல் ஒன்று. பரிதல் அன்பு வழிப்பட்டதாதலின் வளைதற் பொருளாதல் தெளிவு.