உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேர்ச்சொல் விரிவு

“பரிஞ்சுஇறை யழுங்கு கின்றேன்”

என்பது இராமாயணம் (உயுத்த. 2481 ; பா. வே).

119

இன்னொரு பொருள் 'வாளின்பிடி' என்பது. வாளின் பிடி வளைவாதல் அறிக.

பரித்தல் :

பரித்தல் என்பது சூழ்தல், பொறுத்தல், பூணுதல், கட்டுதல் முதலிய பொருள்களைத் தரும்.

“புண்ணுமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்”

என்னும் அகப்பாடல் (31) புண் சொரி குருதி, தம்மைச் சூழக் கிடந்தோர் என்னும் பொருள்தருதல் காண்க.

'புகழையார் பரிக்கற் பாலார்" என்னும் கம்பர் வாக்கு பொறுத்தல் பூணுதல் ஆகிய பொருளது (கிட். 3:6). "மண்டமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்" என்னும் புறப்பாட்டும் (75) தாங்குதல் அல்லது பொறுத்தல் பொருளதே. "உயிர்ப்பிடை பரிப்ப" என்பது கட்டுதல் பொருளது (கம். கிட்864).

பரிதல் :

விரும்புதல் சார்தல் வருந்துதல் அஞ்சுதல் பிரிதல் அகலுதல் அழிதல் முதலிய பொருள்களையும் இவற்றின் சார்பான பொருள்களையும் விரிவாகக் கூறுவது பரிதலாகும்.

பரிதல் அன்பு; அவ்வன்பு விரும்புதலாம்; சார்தலாம்; அவ்வன்புத் தடைக்கு வருந்துதல் நிகழும்; அஞ்சுதலுமாம்; அன்பின் அகற்சி பிரிவாம்; பெருந்துயராம்; அழிவுமாம். எல்லாம் வட்டமிட அமையும் அன்புப் பரிவை விளக்கின் பெருவிரிவாம். பரிதி:

பரிதி என்பது வட்ட வடிவு என்கிறது திவாகரம்.

“வலயம் நேமி திகிரி மண்டிலம்

எனவும்

பரிதி ஆழி பாண்டில் விருத்தம்

கோளகை கடகம் பாலிகை கொம்மை

தட்டு வலையம் சக்கரம் சில்லி வட்ட வடிவிற் கொட்டிய பெயரே”