உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

"குடிலம் தட்டு வாங்கல் குலாவல்

கோட்டம் வணரே வளாவல் வளைதல்’

""

எனவும் வட்ட வடிவம் குறிக்கும் சொற்களைத் தொகுத் துரைக்கிறது.

ஒளி என்பதைப் "பரிதியம் பரிதி ஒத்தான்" என்னும் அதே நூல் வேள்வித்தீயைச் சுற்றியிடப்படும் தருப்பைப் புல்லைப் 'பரிதி' என்று குறித்தல், “பாசிலை நாணற்படுத்துப் பரிதிவைத்து” என்னும் நாச்சியார் திருமொழியால் விளங்கும் (6:7).

பரிதி கதிரோன் ஆதலால் அதன் மண்டலம் 'பரிதிவட்டம் எனப்படும்.

‘வெங்கதிர்ப் பரிதிவட்டம்’

என்பது பெரிய திருமொழி (45: 10). 'பரிதி வானவன்' எனக் கதிரோனைக் குறித்தார் கம்பர் (பால. 346). பரிதி என்பது வட்டத்தின் சுற்றளவைக் காட்டுதல் கணக்கியல். பரிதி என்பார் ஒருவர் திருக்குறள் உரையாசிரியர்.

இவற்றையன்றிக் குண்டலம், பருதி, படலிகை, மல்லை, வட்டணை, வல்லை, வட்டு, வட்டகை இன்ன சொற்களும் வட்ட முடிவு குறிப்பனவே.

கதிரோன் வடிவு வட்டம். அது "பரிதியஞ் செல்வன்" எனச்சாத்தனாரால் சொல்லப் படுகிறது (மணி. 4 : 1)

தேன் கூட்டைச் சொல்லும் நக்கீரர் "பரிதியின் தொடுத்த தண்கமழ் அலர் இறால்" என்கிறார். (திருமுரு. 299-300), தேனடையும் கதிரும் பரிதி வடிவாதல் காட்டும் உவமை இது.

தேர் உருளையும், ஆழிப்படையாம் சக்கரப் படையும் பரிதி எனப்படும்.

"அத்தேர்ப்பரிதி" என்பது களவழி (4). "பரிதியில் தோட்டிய வேலை" என்பது கல்லாடம் (80). பரிதி கதிரோனைக் குறித்தலால் அதன்பின் அதன் ஒளியையும், அதனைச் சூழ அமைந்த ஒளி வட்டத்தையும் குறிப்பதாயிற்று.

பரிவேடம் என்பதை "வளைந்து கொள்ளும் பரிதி" என்னும் இரகு வம்சம்.