உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

வேர்ச்சொல் விரிவு

-

123

விருந்து பரிமாறுதல், பரிமாறுபவர், பரிமாறல் என்பவை திருமண விழாத்தோறும் பன்னூறு முறை பழகும் சொல். வளைந்து வளைந்து வளைய வளைய வந்து வந்து பரிமாறும் இப்பரிமாறுதலைக் குழல் துளைகளில் குழந்தைக் கண்ணன் சிறுவிரல் தடவிப் பரிமாறுதலாகச் சுவை சொட்டச் சொட்டப் பாடுகிறார் பெரியவர் ஆழ்வார்.

"சிறுவிரல்கள் தடவிப் பரிமாற" என்பது அது (3.6:8) இப்பரிமாறுதல் சொல் ஒழுகுதல், உலாவுதல், செலவிடுதல் முதலிய பொருள்களாய் விரிகின்றது. பரிமாறுதல் பணி மாறுதலாகக் காட்டுகிறது ஞான வாசிட்டம். "துணைக் கவரி பரிமாற" என்பது அது (லீலை 22)

பரியகம் :

“பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை

அரியம் காலுக் கமைவுற அணிந்து"

எனப் பரியகம் காலணியாதலைக் குறித்தார் இளங்கோவடிகளார் (சிலப்.6:84-85). 'பரியகம், காற்சவடி' என்றார் அரும்பத உரையாசிரியர்.

“பரியகமாவது.

பொன்னிதழ் பொதிந்த பன்னிற மணிவடம் பின்னிய தொடரிற் பெருவிரல் மோதிரம் தன்னொடு தொடக்கித் தமனியச் சிலம்பின் புறவாய் சூழ்ந்து புணரவைப் பதுவே.

என்னை?

அவ்வாய் மகரத் தணிகிளர் மோதிரம் பைவாய் பசும்பொற் பரியக நூபுரம்

மொய்ம்மணி நாவின் முல்லையங் கிண்கிணி

கௌவிய ஏனவுங் காலுக் கணிந்தாள்'

என்றார்" எனக் கூறினார் அடியார்க்கு நல்லார்.

பரிவட்டணை :

சை எழுவும் எண்வகையுள் ஒன்று பரிவட்டணை.

“பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல்

கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ்